ராஜீவ் பார்க்கவா
இந்தியாவில் புதியதாக ஏதோ ஒன்று உருவாகிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. பத்தாண்டு காலத்திற்கு முன்னர் இந்தியாவில் ஜனநாயகம் செழிப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. அரசியலில் சிறிது அளவிலும் ஆர்வம் இல்லாத மக்களும் கூட, பொது வாழ்க்கை பற்றிய தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தின் தேவை அதிகரித்து வருவதாக உணர்ந்தார்கள். 21ஆம் நூற்றாண்டின் முதல் 10 ஆண்டுகளை நினைத்துப் பாருங்கள். தகவல் மற்றும் கல்வி பெறும் உரிமைகளை ஒவ்வொரு குடிமகனுக்கும் அளிக்கும்படி காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஒன்றிய அரசு சமூக அலுவலர்களால் கட்டாயப் படுத்தப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைப்பாடு உறுதி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பாலின வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிர்பயா நிகழ்வு ஆயிரக்கணக்கான இளைஞர்களையும், இளம் பெண்களையும் துடிப்பு மிகுந்த அரசியல் செயல்பாட்டாளர்களாக மாறச் செய்தது ஆகிய பெரிய மாற்றங்கள் நாட்டில் ஏற்பட்டதை குறிப்பிட்டுக் கூறலாம். நாட்டில் நடைபெறும் அநீதிச் செயல்களை தங்கள் ஒளிப்படக் கருவிகளில் பதிவு செய்து, அரசை குற்றவாளிக் கூண்டில் அடிக்கடி ஏற்றிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி நிலையங்களுக்கு பத்திரிக்கையாளர்களாகவே மாறிய குடிமக்கள் அனுப்பி வைத்துக் கொண்டிருந்தனர். அப்போதைய ஒன்றிய அரசை செயல்படவிடாமல் முடக்கிப் போட்ட லஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை எவரால் மறக்க இயலும்? பா.ஜ.கட்சியை ஒன்றிய அரசின் அரியணைக்கும் புதியதாக பிறந்த ஆம் ஆத்மி கட்சியை டில்லி மாநில அரசின் அரியணையிலும் இந்த இயக்கம் ஏற்றி வைக்கவில்லையா?
2013ஆம் ஆண்டில் நாட்டில் ஜனநாயகப் புரட்சி ஒன்றினை உருவாக்கும் விளிம்பில் நாம் இருந்ததாக தோன்றியபோது, துடிப்பு மிகுந்த மக்கள் தங்களுக்கு ஒளிமிகுந்த எதிர்காலம் இருப்பதாக உணர்ந்ததாகவே தோன்றியது. இந்தியாவில் ஒரு புதிய அரசியல் எதிர்காலத்தை உருவாக்குவதற்காக மிக உயர்ந்த அளவு ஊதியம் பெற்று வந்த வேலைகளையெல்லாம் விட்டு விட்டு ஏராளமான இருபால் இளைஞர்களும் இந்த இயக்கத்தில் வந்து சேர்ந்தனர். தங்கள் செயல்பாடுகளுக்கு பொறுப்பேற்று மக்களுக்கு பதில் கூற கடமைப்பட்டு உள்ள புதிய கட்சிகளை தங்களால் உருவாக்க முடியும் என்று அவர்கள் நம்பினர். அத்துடன் மக்களுக்கு. உண்மையாக என்ன தேவையோ அதனை அளிப்பதாகவும் அவர்கள் உறுதி பூண்டனர்.
என்றாலும் ஒரே ஒரு அலையிலே நாட்டின் அரசியல் சூழ்நிலை மிகப்பெரிய அளவில் மாற்றம் அடைந்து விட்டது. காங்கிரஸ் அரசை எதிர்த்து துடிப்புடன் செயல்பட்ட சமூக ஆர்வலர்கள் எல்லாம் இப்போது வில்லன்களாக பார்க்கப்பட்டு. "அன்டோலன் ஜீவி" என்று அழைக்கப்படுகிறார்கள். துடிப்புமிக்க குடிமக்கள் என்று அன்று உருவகப்படுத்தப்பட்டவர்களுக்கு தான் இன்று ஆட்சி அதிகாரத்தின் கதவுகள் மூடிக் கொண்டதாக தோன்றுகிறது. துடிப்பு மிகுந்த குடி உரிமை மட்டுமன்றி, குடியுரிமை என்ற கருத்து சிக்கலில் சிக்கிக்கொண்டு தவித்துக் கொண்டிருக்கிறது.
சரியோ, தவறோ அமைதி நிறைந்த குடிமக்களாக தாங்கள் பெற்று வரும் அனைத்து உரிமைகளையும் விட்டுக் கொடுக்கவும், அரசியல் அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்ளவும் சகித்துக் கொள்ளவோ குடிமக்களில் சிலர் தயாராக உள்ளனர். குடிமக்கள் உரிமைகள் ஏதுமற்ற மக்களாக இருக்கும் போது அவர்களது ஆட்சியாளர்களின் ஆட்சி எல்லைக்குள் அவர்கள் அடக்கம் நிறைந்த குடிமக்களாக வாழ்வதை காணும்போது, ஒரு புதிய .. அரசியல் அடிமை பிறப்பதை குறிப்பிடும் நேரமாக இந்தக் கணத்தை நினைக்கவே எனக்குத் தோன்றுகிறது.
துடிப்புமிக்க குடிமக்கள்
குடிமக்களும் இதன் பொருள் என்ன என்பதைப் புரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது ஆகும். மூன்று முக்கியமான பெயர்களுக்கு இடையே உள்ள முரண்பாட்டை வெளியே கொண்டு வருவதன் மூலம் அதனைப் புரிந்துகொள்ள முடியும். முதலில் துடிப்பு மிகுந்த குடியுரிமையை எடுத்துக்கொள்வோம். விளக்கத்தின்படி இங்கு குடியுரிமை என்பது செயல்படுவது பற்றிய ஒரு விவகாரமாகும். துடிப்பு மிகுந்த குடிமக்களால் செய்ய இயன்ற செயல்பாடுகள்
1 வாக்களிப்பது, 2) நாடு, மக்கள் நலன்கள் பற்றி வெளிப்படையாக பேசுவது, பொதுக்கொள்கை சட்டம் ஆகியவற்றின் மீது செல்வாக்கு செலுத்துவதற்கு சட்டப்படி உள்ள வழிகளை கடைப்பிடித்தல், தேவைப்பட்டால் அவற்றை விமர்சனம் செய்வது. திருத்துவது அவற்றை ரத்து செய்வது உள்ளிட்ட செயல்பாடுகளை மேற்கொள்வது, 3) பொதுப் பதவிகளுக்காக தேர்தலில் போட்டியிடுவது பொதுக் களத்தில் மிக மிக அரிதாகவே செயல்படும் அமைதி நிறைந்த குடிமக்களின் பண்புகளுக்கு முற்றிலும் நேர் முரணாகவும் நேர் மாறானதுமாகும் இது. ஒன்று வாக்களிக்க அவர்கள் விரும்பமாட்டார்கள். அல்லது அவர்களால் இயலாது. பொதுப் பிரச்சினைகளில் ஒரு நிலைப்பாட்டை மேற்கொள்வது அவர்களால் இயலாது. அவ்வாறு மேற்கொள்ளப்பட்டதும் இல்லை. பொதுப் பதவிகளுக்கு தேர்தலில் போட்டியிடுவது என்பது கற்பனை செய்து பார்க்கப்பட முடியாததும் அவர்களால் விரும்பப்படாததும் ஆகும். அவர்கள் அமைதி நிறைந்தவர்களாக இருப்பதன் காரணமே, அரசிடமிருந்து அவர்களுக்கு கிடைக்கும் பொருட்களிலேயே அவர்கள் மனநிறைவு அடைந்துவிடுகிறார்கள் என்பதுதான். குடியுரிமை என்பது இந்த இடத்தில் ஒருவர் என்ன - பெறுகிறார் என்பதைப் பொறுத்தே விளக்கமளிக்கப்படுகிறதே அன்றி, அவர் என்ன செய்கிறார் என்பதைப் பொறுத்தது அல்ல. இந்த சூழ்நிலை அவர் மீது நீக்கப்பட்டாலும் சரி அல்லது அவராக விரும்பித் தேர்ந்தெடுத்துக் கொண்டதாக இருந்தாலும் சரி, அதற்கு இந்த விளக்கம் தான் அளிக்கப்படுகிறது,
ஆனாலும், இன்னமும் அவர்கள் ஏன் குடிமக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்? இரண்டு பண்புகள் அதற்கு இருப்பதே அதன் காரணம். முதலாவது அவர்கள் ஒரு அரசியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது. அவர்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான அடையாள அட்டையை தொடர்ந்து பெற்றிருப்பவர்கள் அவர்கள்.
இரண்டாவதாக அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் - வன்முறை செயல்களில் இருந்து தேவைப்படும் பாதுகாப்பு பெறும் உரிமை மற்றும் ஒரு குறைந்த அளவு விலையில் உணவு மற்றும் இதர நுகர் பொருட்களை பெறும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை அவர்கள் தக்க வைத்துக் கொண்டுள்ளனர் என்பது இரண்டாவது, மேலும் தங்களது சொந்தக் கோரிக்கைகள் என்று சிலவற்றை அவர்கள் முன்வைக்கும்போது அரசு வாக்குறுதி அளித்த செயல்கள் பொருள்கள் அவர்களுக்கு கிடைக்காதபோது அதுபற்றி அவர்களால் புகார் செய்ய இயலும், அமைதி நிறைந்த குடிமக்கள் ஆட்சியாளருக்கு நெருக்கமானவர்கள் என்றாலும் அவர்கள் அரசியல் அடிமைகள் அல்ல.
ஆட்சியாளர்களின் அடிமைகள்
ஆட்சியாளர்களின் மூலம் பாதுகாப்பையும் இதர பயன்களையும் பெறுபவர்கள் ஆவர். ஆட்சியாளரின் தனிப்பட்ட நலன்களை மேம்படுத்துவதில் மட்டுமே தங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கு இந்த அர்ப்பணிப்பு உணர்வும், விசுவாசமும் உதவுவதில்லை. ஆட்சியாளர்களால். விளக்கம் அளித்தபடி பொது நலனுக்கான திட்டத்திற்கு அவர்கள் வெகு எளிதாக தங்களைத் தாங்களே கீழ்ப்படிந்தவர்களாக ஆக்கிக் கொள்ள முடியும். இரண்டாவது நாட்டின் அரசை இந்த ஆட்சியாளர்களை கொண்டு குடிமக்கள் எப்போதுமே சமப்படுத்தி காண்பதில்லை. எந்த ஒரு ஜனநாயக ஆட்சியாளரும் நாட்டின் அரசை தனக்கு சொந்தமான அரசு என்று கூறிக்கொள்ள முடியாது. என்றாலும் ஆட்சியாளர் செய்வதைப் போலவே, அரசியல் அடிமைகள் ஆட்சியாளர்களுடன் அரசை அடையாளப்படுத்தி வாழ்கின்றனர். ஒரு நாட்டு அரசின் சொந்தக்காரர்கள் என்பது, ஒரு ஆட்சியாளரின் அடிமைகளாக ஆவது என்ற பொருளையேத் தரும்.
சமமாக இருக்கும் ஒரு ஜனநாயக குடிமக்களின் அமைப்பை போலல்லாமல். அரசியல் அடிமைக்கும் ஆட்சியினருக்கும் இடையேயான உறவு, அப்போது சற்றும் வெட்கமின்றி பாரம்பரியமாக வருவதாகும். கீழ்ப்படிந்து இருப்பது சேவை செய்வது என்பனவற்றின் ஒரு கலவையாகவே அரசியல் அடிமைகளின் நிலை இருக்கிறது என்றபோதிலும், மிகுந்த நன்றிப் பெருக்குடன் அதனை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். அவர்களுக்கு ஆட்சியாளர் அளிக்கும் பாதுகாப்பே அதன் காரணமாகும். ஆட்சியாளரின் விருப்பங்களுக்கு கட்டளைகளை என்று விளக்கமளிக்கும் அவர்கள் புரட்சி எதனையும் செய்ய விரும்பும் மனநிலையில் இருப்பவர்கள் அல்ல. அரசியல் அடிமைகள் காட்டும் நன்றி உணர்வுக்கு ஏற்றப் படியான பயன்களை ஆட்சியாளர் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்களுக்கு வழங்குகின்றனர். நாட்டின் கருவூலத்தில் இருந்து மிக மிக சிறிய அளவிலான பணத்தை இந்த அரசியல் அடிமைகள் பெறும்போது ஆட்சியாளரின் தனிப்பட்ட அறக்கட்டளையில் இருந்து கருணையுடன் நேரடியாக வழங்கப்படும் தான தர்மம் அது என்று அவர்கள் நம்புகின்றனர். -
ஆட்சியாளரின் கருணையினால் பெரு மகிழ்ச்சி கொள்ளும் அவர்கள் ஆட்சியாளருக்கு விசுவாசம் மிகுந்தவர்களாகவே இருப்பார்கள். கீழ்ப்படியாமை என்பது வெட்கப் படத்தக்க துரோகத்துக்கு இணையானது. இப்போது நமது நாட்டில் நிலவும் அரசியல் சூழலின் ஒரு பெரும் பகுதி நான் மேலே விவரித்தபடியே இருக்கிறது என்றே நான் அய்யப்படுகிறேன். அதனால் தான். அரசியல் அடிமை என்ற ஒரு புதிய பிரிவு ‘லேபராத்தி’(Labbharthi) என்ற பெயரில் மறுபிறப்பு எழுத்து இருக்கிறது என்றே நான் பார்க்கிறேன். ஆட்சியாளரின் கருணையினால் ஒரு மிகச்சிறிய நிதி உதவியை நிறைந்த அமைதியுடன் பெற்றுக் கொள்பவர்கள் தான் இந்த லேபரார்த்திகள் (Labbharthi) என்பவர்கள் எப்போதுமே உரிமைகளைக் கோராமல் இருக்கும் இவர்கள் எப்போதும் உரிமைகளை கேட்டுக்கொண்டே இருக்கும், மனசாட்சியின் படி தீவிரமாக செயல் படும் குடிமக்களுக்கு நேர்மாறானவர்கள். இந்த லேபரார்த்திகள் அண்மையில் நடைபெற்ற
5 சட்டமன்ற தேர்தல்களின் போது அவர்கள் தனக்காக வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கையுடன் மிகச்சரியாக பிரதமர் அவர்களிடம் சென்றார். இந்த சூழலில் அது ஒன்றும் அசாதாரணமானது அல்ல. தனது உப்பை தின்றவர்கள் தனக்கு துரோகம் செய்யமாட்டார்கள் என்று தன் உள்மனதில் அவர் அறிந்திருந்தார், உப்பைத் தின்றவர்கள் அவ்வளவு எளிதாக துரோகம் செய்து விட மாட்டார்கள். 2013ஆம் ஆண்டில் வானத்தில் எங்கும் காண முடியாமல் இருந்த அரசியல் அடிமைத்தனம் எனும் வானவில் பழிதீர்க்கும் வகையில் மீண்டும் திரும்பி வந்துவிட்டது.
இன்றைய அரசியல் உலகம் ஆட்சியாளர்களுக்கும் அவர்களது அமைதி நிறைந்த விசுவாசம் மிகுந்த குடிமக்களுக்கும் இடையே மிகவும் சுத்தமாக பிரிக்கப்பட்டுள்ளது என்ற மேற்குறிப்பிட்ட எண்ணத்தை நான் தந்திருக்கக் கூடும். இத்தகையதொரு மிக மிக மோசமான எண்ணத்தைத் தருவது என் நோக்கமல்ல. ஆட்சியாளர்களாகவோ அல்லது அமைதி நிறைந்த குடிமக்களாகவோ இல்லாத மக்களில் ஒரு மிகப்பெரும் பகுதியினரும் இருக்கின்றனர். ஒரு உயர்ந்த ஒட்டுச் செடியாக கருத இயன்ற மக்களை அடிமை குடிமக்கள் என்று நான் வகைப்படுத்திக் கூறுவேன். அமைதி நிறைந்த குடிமக்கள் மற்றும் தீவிரமாக செயல்பட இயன்ற குடிமக்கள் ஆகியவற்றின் ஒரு கலவையாக இருப்பவர்கள் அவர்கள். இதன் காரணம் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலேயே குடியுரிமையின் அம்சங்களை சரண் செய்துவிட்டு அடிமைத்தனத்தை விரும்பியவர்கள் ஏற்றுக் கொள்வதுதான்.
ஒரு நாட்டை சேர்ந்தவர்கள் என்று தங்களை தாங்களே அவர்கள் பார்ப்பதினால் அவர்கள் குடிமக்கள் ஆவர். இது ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரமாக பிரிந்திருக்கும் ஒரு பகுதியாகும். ஆனால் அவர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருப்பது என்னவென்றால் தனிப்பட்ட நுகர்வோரின் வாழ்க்கை நாட்டு அரசை சார்ந்து இருப்பது அல்ல என்பதுதான். அவர்களது உயிர் மற்றும் சொத்துக்கள் ஊதியம் தரப்படும் பாதுகாப்புப் படையினரால் பாதுகாக்கப்படுகிறது.
குடியுரிமையில் ஆர்வம் இல்லை
அரசின் முன் வெகுசில கோரிக்கைகளை மட்டுமே அவர்கள் முன் வைப்பதால் தீவிரமாக செயல்படும் குடியுரிமையில் அவர்களுக்குப் பெரிய மதிப்பு ஆர்வம் எதுவும் இருப்பதில்லை. அத்தகையவர்கள் அமைதி நிறைந்த குடிமக்களாக இருப்பதிலேயே மகிழ்ச்சி கொள்பவர்கள் ஆவர். ஆட்சியாளர்கள் யார் என்பதை பற்றிய கவலையோ அக்கறையோ கூட அவர்களுக்கு இருக்காது. இது அவர்களை லேபரார்த்திகளில் இருந்து மாறுபட்டவர்களாக செய்கிறது. ஒரு குறிப்பிட்ட ஆட்சியாளரின் கருணையையே தங்களின் உயிர் பிழைத்திருப்புக்காக நம்பியிருக்கும் இந்த லேபரார்த்திகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள் அவர்கள்.
என்றாலும் அந்நிய ஆக்கிரமிப்பாளர் மற்றும் உள்நாட்டு பகைவர்கள் என்று கருதப்படுபவர்களிடமிருந்து இந்த அரசுதான் ஆட்சியாளர்கள் தான் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதற்காக) குடிமக்கள் என்ற தங்களது அடையாளத்தை கைவிட்டுவிட்டு அரசியல் அடிமைகளாக இருப்பதைத் தேர்ந்தெடுக்கும் அவர்கள் ஆட்சியாளரையும் அவரது பிரியமான செயல் திட்டத்தையும் ஆதரிக்கும் விருப்பம் கொண்டு, ஆட்சியாளர்களைக் கேள்விகள் கேட்காமலே விசுவாசமான அரசியல் அடிமைகளாக ஆவதை விரும்பித் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர்.
நாட்டு அரசை சார்ந்து இருக்கும் லேபரார்த்திகளும் - அரசுத் தலையீடு அற்ற சுதந்திரமான நுகர்வோரும் இங்கு, சங்கமிக்கின்றனர். ஆட்சியாளரின் கருணையினால் அவர்களது தான தர்ம அறக் கட்டளைகளி லிருந்து பெறப்படும் தங்களின் பொதுவான பயன் பாடுகளை இருவரும் பகிர்ந்து கொள்வதுடன் ஆட்சியா ளருக்கு தங்கள் விசுவாசத்தை பொதுமக்கள் நன்றாக அறிந்து கொள்ளும் வகையில் எடுத்துக்காட்டுவர்.
அய்யகோ, அமைதி நிறைந்த குடிமக்களை ஒரு கடந்த கால நினைவுச்சின்னமாக பார்த்துக் கொண்டிருப்பது மாற்றமடைந்து அதிர்ச்சி தரும் வழியில் அது மீண்டும் திரும்ப வந்துவிட்டது.
நமது அரசியல் உலகில் மறுபிரவேசம் செய்துள்ள அரசு நமது ஜனநாயகத்தை மிக மிக மோசமான அளவில் சீரழித்து விட்டதுடன் குடியுரிமை என்பது மக்களுக்குத் தேவையே இல்லாத ஒன்று என்று ஆகிவிட்டது.
நன்றி: ‘தி இந்து’ 19.3.2022
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
No comments:
Post a Comment