ஒசூர், ஏப்.22- நீட் எதிப்பு பரப்புரை பயணமாக நேற்று (21.4.2022) ஒசூர் வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஒசூர் மாவட்ட கழக காப்பாளர் மறைந்த துக்காராம் இல்லத்திற்கு சென்று குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்தார். மு.துக்காராமின் வாழ்விணையர் கல்யாணி துக்காராம் மற்றும் பிள்ளைகளுக்கு தமிழர் தலைவர் ஆறுதல் தெரிவித்தார்.
ஒசூர் மாவட்ட கழக காப்பாளர் மு.துக்காராம் அவர் தனது 81 ஆம் வயதில் மறைவுற்றார். அவரது இறுதி நிகழ்ச்சி 21.04.2022 அன்று நடைபெற்றது. இரங்கல் கூட்டம் மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாதன், ப.க. மேனாள் ஒசூர் நகர செயலாளர் வசந்தசந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோ.திராவிட மணி, அ.செ.செல்வம், மாவட்ட மகளிரணி செயலாளர் லதாமணி, விடுதலைச் சிறுத்தை கட்சி ஒசூர் மாநகர துணைச் செயலாளர் மு.ராசகோபால் ஆகியோர் இரங்கலுரைக்குப் பின், எந்தவித மூடச்சடங்குகளுமின்றி மு.துக்காராமின் உடல் ஒசூர் மின் சுடுகாட்டில் எரியூட்டபட்டது.
No comments:
Post a Comment