மதவாத அமைப்புகளின் அத்துமீறல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 1, 2022

மதவாத அமைப்புகளின் அத்துமீறல்

 அழிவு கருநாடகாவிற்கு மட்டுமல்ல இந்தியாவின் நல்லிணக்கத்திற்கும்தான் 

பாணன்

கருநாடகாவில் கோயில் திருவிழாக்களில் இருந்து இஸ்லாமிய வணிகர்களை விலக்கி வைக்கும் ஹிந்துத்துவா குழுக்களின் முயற்சிக்கு எதிராக மெல்ல மெல்ல மக்கள் குரலெழுப்பத் துவங்கி உள்ளனர்.

அங்கு அமைதியின்மை அதிகரிக்கிறது, இசுலாமிய வணிகர்கள் அழுத்தத்தை ஒப்புக்கொள்கிறார்கள்.  கருநாடகம் எப்போதும் அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சியை கொண்டிருந்தது. இப்படி இருக்கும் சூழலில் வகுப்புவாத சக்திகளின் அத்துமீறலை அவர்கள் அனுமதிக்கக் கூடாது.

பெங்களூரு தெற்காசியாவில் கணினித் துறை யின் முக்கிய மய்யமாக இருக்கிறது. ஆனால் அரசியல் ஆதாயத்திற்காக மக்களிடையே பிளவை ஏற்படுத்த சில அமைப்புகள் வரிந்து கட்டிக் கொண்டு இறங்கி உள்ளன. இதன் ஆபத்து குறித்து கருநாடக மாநில சட்டமன்றத் தலைமைக் கொறடா தாமதமாக விழித்துக் கொண்டு அறிக்கை விடுத்துள்ளார்.

கருநாடக மாநிலத்தின் முக்கிய வணிக நிறுவனத்தின் தலைவர் தனது சமூகவலை தளத்தில் இது குறித்து கவலையோடு பதிவிட்டுஇந்த வளர்ந்து வரும் மதப் பிளவை தயவுசெய்து தீர்க்கவும் முதலமைச்சர் பொம்மை விரைவில் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பார் என்று நான் நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இசுலாமிய வணிகர்களை விரட்டுங்கள் என்ற பரப்புரை  மத்திய மற்றும் மேற்கு கருநாடகா வில் பரவி பல உள்ளூர் வணிக நிறுவனங்களை மூடக்காரணமாக இருந்தது.

திருவிழாக்களை ஏற்பாடு செய்யும் பல கோவில் கமிட்டிகள் தடைகள் குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன, மேலும் இவை நீண்டகால சமூக உறவுகளை பாதிக்கலாம் என்று கூறுகின்றன.

அரேபிய இசுலாமிய வணிகரால் கட்டப்பட்ட தாகக் கூறப்படும் துர்காபரமேஸ்வரி கோயிலின் நிர்வாகக் குழுத் தலைவர், கோவில் பாதையில் உள்ள இஸ்லாமிய வணிகர்களின் கடைகளைப் புறக்கணிக்கவேண்டும் என்றும் அவர்களை ஊருக்குள் வேறுபகுதிக்கு அனுப்ப வேண்டும் என்றும் விசுவ ஹிந்துபரிஷத்  விடுத்த கோரிக் கையை நிராகரித்ததாக கூறினார்.  இதனை அடுத்து விஷ்வ ஹிந்துபரிசத் அமைப் பினர் கோவில் நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட மக் களைத்தூண்டுகின்றனர் என்று கவலையோடு தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களாக, விஷ்வ ஹிந்து மற்றும் பஜ்ரங் தள் போன்ற குழுக்கள் தட்சிண கன்னடா மற்றும் சிவமொக்காவில் உள்ள கோவில் திருவிழாக்களில் இஸ்லாமிய வணிகர் களுக்கு தடை ஏற்படுத்தினர். எச்சரிக்கைப் பதாகைகளை வைத்தனர்.

கருநாடகா அரசு  மாநில சட்டமன்றத்தில் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ஹிந்து சமய அறநிலையத்துறை சட்டம், 1997இன் கீழ் 2002 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விதி யின்படி, கோயில் வளாகத்திற்குள் ஹிந் துக்கள் அல்லாதவர்கள் வணிகம் நடத்துவ தற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று கூறியது.  இதனையே வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு கோவில் சாலைகளில் உள்ள இஸ்லாமியர்களின் வணிக நிறுவனங்களுக்கு தடை விதிக்கவும் அவர்களை வெளியேற்றவும் ஹிந்துத்துவா சக்திகள் களமிறங்கி உள்ளனர்.

 கருநாடக மக்கள் எப்போதுமே பிரிவினையை விரும்ப மாட்டார்கள். கோவாவில் பா... ஆதிக்கம் அதிகரித்த பிறகு அதனை ஒட்டியுள்ள மங்களூரு, உடுப்பி போன்ற பகுதிகளில் ஹிந்துத் துவ மதவாதிகள் பிரிவினையை விதைக்கத் துவங்கினர். எடியூரப்பாவின் ஆட்சிக்காலத்தில் அவர்களுக்கு முழுவதும் சுதந்திரம் அளிக்கப் பட்டது, அதன் விளைவு இஸ்லாமிய மாணவி களின் கல்வியில் மண் அள்ளிப்போட்டார்கள். இப்போது இஸ்லாமிய வணிகர்களுக்கு எதிராக புறப்பட்டுள்ளனர்.

இவர்களின் முழுமையான திட்டம் மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி, அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதுதான்.. கட்டாயம் நேர்மையான முறை யில் அவர்களால் ஆட்சியைப் பிடிக்க முடியாது, ஆகவே தென் இந்தியாவிலும் மதவாதப் பிளவைத்தூண்டி விட்டுள்ளனர். இவர்கள் வைத்த மதவாத நெருப்பு ஏற்கெனவே பற்றி எரிந்து தணிந்து கொண்டிருக்கும் வட இந்தியா வில் மீண்டும் பற்றத்துவங்கினால் நிலமை மோச மாகும். அதுமட்டுமல்ல இவர்களின் அடுத்த இலக்கு கேரளா மற்றும் தமிழ்நாடாக இருக்கலாம் என்பதையும் நாம் நினைவில் கொண்டு எச்சரிக் கையாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment