சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சென்னை,ஏப்.27- சட்டமன்றப் பேரவை யில் இன்று (27.4.2022) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியபோது குறிப்பிட்டதாவது, தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் இன்று (27-.4-.2022) அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவின்போது, எதிர்பாராத விதமாக, தேர், மின் கம்பியில் உரசியதால் விபத்து ஏற்பட்டு, நிகழ்வு இடத்திலேயே 11 பேர் உயிரிழந்து விட்டனர் என்ற நெஞ்சை உலுக்கும் செய்தியினை இப்பேரவைக்கு மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தஞ்சாவூர் மாவட்டம், மேலவெளி கிராமத்திற்கு உட்பட்ட களிமேடு அப்பர் திருக்கோயிலில் கடந்த 26-.4-.2022 அன்று நடைபெற்ற திருநாவுக்கரசு 94 ஆம் ஆண்டு சித்திரை விழாவின் தொடர்ச்சி யாக நடைபெற்ற தேர் பவனி வீதி உலாவின்போது, இன்று அதிகாலை 3.-10 மணி அளவில் தஞ்சாவூரிலிருந்து பூதலூர் செல்லும் சாலையில் தேரோட் டம் முடிந்து, தேரினைத் திருப்ப முற்பட்டபொழுது, அருகில் இருந்த உயர் மின்னழுத்த மின் கம்பியில் உரசியதாகத் தெரிகிறது. அப்போது ஏற்பட்ட மின் விபத்தில் நிகழ்வு இடத்திலேயே மோகன், பிரபாத், ராகவன், அன்பழகன், நாகராஜ், சந்தோஷ், செல்வம், ராஜ்குமார், சாமி நாதன், கோவிந்தராஜ், பரணி ஆகிய 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த துயரமான நிகழ்வு நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்துள்ள 16 பேர்களும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர் களுக்குத் தேவையான அனைத்து சிறப்பு சிகிச்சைகளையும் அளிப்பதற்கு நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், இப்பணி களை மேற்பார்வையிடவும், துரிதப்படுத் திடவும், தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி அவர்களும் மக்கள் பிரதிநிதிகளும், அரசு உயர் அலுவலர்களும் நிகழ்வு இடத்திற்கு அனுப்பப்பட்டுள் ளார்கள். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா அய்ந்து இலட்சம் ரூபாயினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். விபத்து நடைபெற்ற இடத்திற்கு இன்று நான் நேரில் சென்று, உயிரிழந் தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரி விக்கவும், காயமடைந்து சிகிச்சையில் உள்ளவர்களைச் சந்திக் கவும் இருக்கிறேன் என்பதைத் தெரிவித் துக் கொள்கிறேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர் களுக்கு மரியாதை செலுத்திடும் வகையில், பேரவையில் பின்வரும் இரங்கல் தீர்மானத் தினை நிறைவேற்றித் தருமாறு பேரவைத் தலைவர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
தீர்மானம்: மிகுந்த துயரமான இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களைப் பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்தி னருக்கு இப்பேரவை ஆழ்ந்த இரங்க லையும் அனுதாபத்தையும் தெரிவிக்கும் தீர்மா னத்தை நான் முன்மொழிகிறேன்.
இதை அடுத்து அனைவரும் எழுந்து நின்று இரண்டு மணி துளிகள் அமைதி காத்து இரங்கல் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment