தமிழ்நாட்டின் கல்வி உரிமையைக் காக்க, சமூகநீதியை மீட்க, தமது 89 வயதிலும், 21 நாட்கள் ‘நீட் எதிர்ப்பு, தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப் புரைப் பெரும்பயணம்’ மேற்கொண்ட தமிழர் தலைவரின் பெரு முயற்சி பேரெழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை மாணவர் மத்தியில் இன்னும் விரிவாக எடுத்துச் செல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
ஒவ்வொரு நாளும் கல்வித் துறையின் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும், மாணவர் உரிமைப் பறிப்புகளையும் கண்டறிந்து, அதற்கெதிரான களத்தைக் கூர்மைப்படுத் துவதில் திராவிட மாணவர் கழகம் முனைப்புடன் செயலாற்றி வருகிறது. அந்தப் போர்க்கருவிகளாம் திராவிட மாணவர்களைப் பட்டை தீட்ட தமிழர் தலைவர் அழைக்கிறார்.
உழைப்பாளர் நாளாம் மே 1 அன்று சென்னையில் நடைபெறவுள்ள திராவிட மாணவர் கழகத்தின் மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்று, பெரியாரின் பணி முடிக்க தமிழர் தலைவர் ஆசிரியரின் வழிகாட்டல் உரை கேட்டு அவர் வழி நடப்போம் வாரீர்!
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்,
திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்
இரா.செந்தூர பாண்டியன்
திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர்
No comments:
Post a Comment