கூலி வேலை செய்யும் பெற்றோர் கூட, தங்கள் பிள்ளைகளை மருத்துவருக்கு படிக்க வைக்க விரும்புகிறார்கள், பொறியாளருக்கு படிக்க வைக்க விரும்புகிறார்கள்.
இந்தக் கனவு எப்படி வந்தது?
100 ஆண்டுகால திராவிடர் இயக்கத்தால் வந்தது. இதைத்தான் இப்போது 'திராவிட மாடல்' என்று குறிப்பிடுகிறார்கள்.
மலம் அள்ளக்கூடிய பெற்றோரின் பிள்ளை இன்று மருத்துவர்! செருப்பு தைக்கக்கூடிய பெற்றோரின் பிள்ளை இன்று மருத்துவர்! விவசாயம் செய்யக் கூடியவன் பிள்ளை இன்று மருத்துவர்! தினக்கூலியின் பிள்ளை தமிழ்நாட்டில் மருத்துவர்!
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்குச் சென் றாலும் இந்த கட்டமைப்பைக் காணமுடியாது.
என்ன காரணம்?
ஒரு காலத்தில் இவர்களுக்கெல்லாம் படிப்பு வராது என்று மனுதர்மத்தில் எழுதி வச்சிருக்காங்க. சூத் திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.
சூத்திரன் என்றால் என்ன? நம்ம அப்பா படிச்சு வாங்கின பட்டமா? நம்ம தாத்தா படிச்சு வாங்கின பட்டமா? கிடையாது. வேசி மகன்னு எழுதி வச் சிருந்தாங்க. உனக்கு படிப்பு வராது என்று சொல்லி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டிய லின, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி வாய்ப்பு இங்கே மறுக்கப்பட்டது.
1952 இல், மூதறிஞர் என்று பாராட்டப்பட்ட ராஜகோபாலாச்சாரியார் குலக்கல்வி என்றொரு திட்டத்தைக் கொண்டு வந்தார். அப்பன் தொழிலை பிள்ளை செய்யவேண்டும். யாரும் எதிர்க்காத போது, பெரியார் எதிர்த்தார். எச்சரிக்கை விடுத்தார். ராஜாஜி பதவியை விட்டு ஓடிப்போனார். பெரியாரால் காமராஜர் முதலமைச்சரானார். அவர், குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார். அதனால்தான் நம் பிள்ளைகள் எல்லாம் படித்தார்கள். இதைச் செய்தது திராவிடர் இயக்கம்.
ஏர் கலப்பை பிடித்த கையில் ஸ்டெதாஸ்கோப்பை எடுக்க வைத்தது திராவிடர் இயக்கம்! ஸ்டெதாஸ் கோப்பை எடுத்திருந்த அனிதாவை தூக்குக் கயிற்றை எடுக்க வைத்ததுதான் ஒன்றிய அரசின் சாதனை?
- வழக்குரைஞர் மதிவதனி, ஒசூர், 21.04.2022)
No comments:
Post a Comment