டொரண்டோ, ஏப். 27- கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழ கத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கரோனா தடுப்பூசி போட்டவர் களும், போடாதவர்களும் இணைந்து செயல்பட்டால், அதனால் ஏற் படும் விளைவை கண்டறிய ஒரு எளிய மாதிரி ஆய்வில் ஈடுபட்டனர்.
அதற்காக, தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை ஒருவருக்கொரு வருடனும், தடுப்பூசி போடாதவர் களை தடுப்பூசி போட்ட குழுவின ருடனும் இணைந்து பழக விட்ட னர். இந்த ஆராய்ச்சி முடிவுகளை கனடா மருத்துவ சங்க பத்திரிகை யில் வெளியிட்டுள்ளனர். அதில், டொரண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டேவிட் பிஸ்மன் கூறியதாவது:-
தடுப்பூசி போட்டுக்கொள்வது தனிநபர் விருப்பம் என்று பலர் கூறுகிறார்கள். ஆனால், தடுப்பூசி போடுவதை கைவிட்ட நபர்கள், தடுப்பூசி போட்டவர்களுக்கு அதிக ஆபத்தை விளைவிப்பது எங்களது ஆய்வில் தெரிய வந்தது.
தடுப்பூசி போட்டவர்களும், போடாதவர்களும் நெருங்கி பழ கும்போது தடுப்பூசி போட்டவர்க ளுக்கு அதிக அளவில் கரோனா பரவுகிறது. தடுப்பூசி போட்டவர் கள் சதவீதம் அதிகமாக இருந்த போதிலும் இந்த அபாயம் நிலவு கிறது.
இது எதிர்கால கரோனா அலைகளுக்கும், புதிய உருமாறிய கரோனாக்களுக்கும் பொருந்தும். சுருக்கமாக சொன்னால், தடுப்பூசி போடாதவர்களால் அவர்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படும் என்று கூற முடியாது. அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற் படும். தடுப்பூசி போட்டுக் கொள் ளாமல் இருப்பது தனிநபர் விருப் பம் என்று வாதிடுபவர்கள், அடுத் தவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை கருத் தில் கொள்வதில்லை என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment