சென்னை, ஏப்.9 சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான சவீதா பல் மருத்துவக் கல்லூரிக்கு உயர்கல்விக்கான ஆஸ்கர் விருது எனப் பாராட்டப்படும் க்யூஎஸ் உலகப் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் 18ஆவது இடம் கிடைத்துள்ளது.
இதன் புகழ்பெற்ற கல்வி கற்பிக்கும் முறை, சிறப்பான நிர்வாகம், சிறந்த பேராசிரியர்கள் ஆகியவற்றின் காரணமாக இக்கல்லூரிக்கு க்யூஎஸ் பல்கலைக்கழகம் 100 மதிப்பெண்களை வழங்கி இருக்கிறது. இந்த அங்கீகாரம் பல் மருத்துவ கல்வி, ஆராய்ச்சி மற்றும் நோயாளி பராமரிப்பு ஆகியவற்றில் சவீதா பல் மருத்துவக் கல்லூரி தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு கிடைத்த மரியாதையாக பார்க்கப்படுகிறது. இந்த தரவரிசை குறித்து சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்ஸ் பல்கலைக்கழக நிறுவனரும் வேந்தருமான டாக்டர் என்.எம். வீரையன் கூறுகையில், உலகளவில் உள்ள உலகின் தலைசிறந்த 18 பல் மருத்துவக் கல்லூரிகளில் சவீதா பல் மருத்துவக் கல்லூரி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறது. இத்தருணத்தில், பல் மருத்துவத் துறையில் சிறந்து விளங்க அயராது உழைத்து வரும் எங்கள் பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment