விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாவிட்டால் இலங்கையைப் போல் பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்திக்கும் கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 5, 2022

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாவிட்டால் இலங்கையைப் போல் பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்திக்கும் கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை

சென்னை, ஏப்.5 -இந்தியாவில் தற்போது இருந்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப் படுத்தாவிட்டால், இலங்கையை போல் ஒரு பொருளாதார நெருக் கடியை இந்தியா சந்திக்க நேரிடும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

பெட்ரோல்-டீசல் விலை ஏற்றத்தை கண்டித்தும், அதை குறைக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப் பாட்டங்கள் நடத்தப்பட்டது. சென்னை பாரிமுனை குறளகம் அருகே நடைபெற்ற போராட் டத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொது மக்களின் உணவு பொருட் கள் விலை ஏறி வரும் சூழலில், பெரும் முதலாளிகளின் நிறுவனங் களுக்கு மட்டும் பல கோடிகள் வாராக்கடனை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்துள்ளதாக கூறி அதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட் டத்தை தொடர்ந்து கே.பால கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களுக்கு பின்னர் தான் பெட்ரோல்-டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதி கரித்து வருவதாலும், சமையல் எரிவாயு விலையும் அதிகரித்து வருவதாலும் சாதாரண மக்களுக்கு கிடைக்கும் உணவுப் பொருட் களின் விலையும் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தற்போது சீராக இல்லை. இந்த நிலையில் பெரும் நிறுவனங் களின் வாராக்கடன்களை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்து வருகிறது. அனைத்து விலைவாசிகளும் இந் தியாவில் தற்போது உயர்ந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந் தால் இலங்கை அரசு தற்போது சந்தித்திருக்கும் பொருளாதார நெருக்கடிபோல் இந்தியாவும் சந்திக்கும் அபாயம் ஏற்படும். இந்த பிரச்சினையை எதிர்கொள்ள வரும் 2024 நாடாளுமன்ற தேர்த லில் மதச்சார்பற்ற அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டியது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment