இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பா.ஜ.க. செய்கிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 9, 2022

இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பா.ஜ.க. செய்கிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, ஏப்.9 -ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தி மொழியை பயன்படுத்துங்கள் என்று சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டுவைக்கும் செயல் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். 

டில்லியில் நடைபெற்ற  நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவின் 37ஆவது கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். என்று கூறினார்.

அவரது இந்த கருத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஒருமைப்பாட்டுக்கு வேட்டு

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் (8.4.2022) கூறி இருப்பதாவது:-

ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல். இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பா.ஜ.க. தலைமை தொடர்ந்து செய்கிறது.

இந்தி மாநிலம் போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித்ஷா நினைக்கிறாரா?. ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது. ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது. ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment