ஒன்றிய உள் துறை அமைச்ச கத்தின் கீழ் செயல் படும் இந்திய உளவுத்துறையில் (அய்.பி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம் : குரூப் 'சி' பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் & அய்.டி., 56, எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் 94 என மொத்தம் 150 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் பி.இ.,/ பி.டெக்., முடித்திருக்க வேண்டும். 2020 / 2021 / 2022இல் GATE நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
வயது : 7.5.2022 அடிப்படையில் 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : GATE நுழைவுத்தேர்வு மதிப்பெண், நேர்முகத்தேர்வு.
நேர்முகத்தேர்வு மய்யம் : டில்லி விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள் : 7.5.2022
விவரங்களுக்கு : https://mharecruitment.in/notification_mha.aspx
No comments:
Post a Comment