செஞ்சி, ஏப். 29-செஞ்சியில் நடை பெறும் பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநாடு தொடர்பான பகுத்தறிவாளர் கழகம் - பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்புகளின் கடலூர், பாண்டிச்சேரி, கல்லக்குறிச்சி, விருத்தாச்சலம்,திண்டிவனம், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் 15.04. 2022 ஞாயிறு மாலை 4 மணிக்கு செஞ்சி பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க கட்டடத்தில் நடை பெற்றது.
மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா தமிழ்ச் செல்வன் அவர்கள் தலைமை யில் கூடியது. வருகை புரிந் தோரை செஞ்சி சே.வ.கோபண்ணா அவர்கள் வரவேற்று உரை யாற் றினார்கள். கலந்துரை யாடல் கூட்டத்தின் பொருள், நோக்கம் ஆகியவற்றைப் பற்றி தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் அவர்கள் விரிவாக பேசினார் கள் .
தொடர்ந்து மாநில மாநாட் டுக்கான செயல்பாடுகள் எப் படி இருக்க வேண்டும் என்ப தையும், மாநாடு சிறப்பாக நடைபெற தேவையானவை எவை,எவை என்பதையும், என்ன என்ன செய்யலாம், என்ன, என்ன செய்யவேண்டும் என்பதை எல்லாம் குறிப்பிட்டு மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வி. மோகன் அவர்கள் உரையாற் றினார்கள்.
மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் ஆ.வெங்க டேசன், மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் இரா. சிவக்குமார், பகுத்தறி வாளர் கழக துணைத்தலைவர் தஞ்சை கோபு. பழனிவேல், திருவாரூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் சு. ஆறுமுகம், ஆகியோர் மாநாடு வெற்றிபெற என்ன செய்யலாம் என்பது பற்றி பேசினார்கள்.
அவரது உரையைத் தொடர்ந்து மண்டல மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் ஆடிட்டர் இரஞ்சித் குமார் உரையாற்றினார். மாநில மாநாடு ஆசிரியர் அவர்கள் அறிவித்திருப்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியான ஒன்று என்று குறிப்பிட்டார்கள்.
தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பங்கேற்ற தோழர்கள் விழுப் புரம் தலைவர் கார்வண்ணன், புதுவை மாநில தலைவர் நடராசன் ,கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலை வர் இரா தமிழன்பன் என்கிற கந்தசாமி, விழுப்புரம் நகர திராவிடர் கழக செயலாளர் ச.பழனிவேல், விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழக இளை ஞரணி தலைவர் பகவான்தாஸ், உளுந்தூர்பேட்டை சூர்யா, விழுப்புரம் மாவட்ட திரா விடர் கழக மாவட்டச் செயலா ளர் அரங்க பரணிதரன், கள் ளக்குறிச்சி பகுத்தறிவாளர் கழக தலைவர் பெ.எழிலரசன், விழுப்புரம் மாவட்ட அமைப் பாளர் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் ஆ.துரை, கள்ளக்குறிச்சி பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் வி.முருகேசன் ஆகியோர் மாநாடு வெற்றி பெறுவதற்கான பல்வேறு வழிமுறைகளையும் அதற்கு தங்களால் என்ன செய்யலாம் என்பது பற்றியும் கூறினார்கள்.
தொடர்ந்து கூட்டத்தில் மாநாட்டுக்கான நிதி திரட் டுவது தொடர்பாக அனை வரும் கருத்து தெரிவித்தனர். விழுப்புரம் நகர திராவிடர்கழக செயலாளர் ச. பழனிவேல் 1000 பேர் ரூ.1000 என்ற திட் டத்தை செயல்படுத்திட வேண்டும் என்றும் தான் அதற்கு முழு ஒத்துழைப்பும், முன்னின்று செயல்படுத்து வதாகவும் கூறினார். அவரது செயலுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் கல்லக்குறிச்சி முருகேசன் ரூ 10000, கல்லக் குறிச்சி எழிலரசன் ப.க. ரூ20000, கடலூர் தமிழன்பன் ப.க. ரூ.50000, விழுப்புரம் மாவட்டம் ரூ 1,00,000, புதுச் சேரி ப.க. தலைவர் நடராசன் ரூ. 25,000 ஆகியோர் நிதி வழங்கிடுவதாக கூறினார்கள். உடனடியாக அவர்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தார்
பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன் தொடர்ந்து கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மா னங்கள் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது.
தீர்மானம் 1:
இரங்கல் தீர்மானம்.
பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதை சுடர் விழுப்புரம் மண்டல தலைவர் க.மு. தாஸ், திண்டிவனம் மாவட்ட கழக தலைவர் மு.கந்தசாமி, திண்டி வனம் மாவட்ட துணைத் தலை வர் சு.பெத்தண்ணன் ஆகி யோர் மறைவிற்கு கலந்துரை யாடல் கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக் கத்தையும் தெரிவித்துக் கொள் கிறது
தீர்மானம்: 2
கடந்த மார்ச் 10ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற மாநில பகுத்தறி வாளர் கழக கலந்துரையாடல் கூட்ட தீர்மானங்களை முழு மையாக செயல்படுத்திட இக் கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் : 3
எதிர் வரும் ஜூன் 19 பகுத் தறிவாளர் கழகத்தின் பொன் விழா நிறைவு மாநாடு விழுப்பு ரம் மாவட்டம் செஞ்சியில் நடத்துவதற்கு வாய்ப்பளித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக்கூட்டம் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் : 4
செஞ்சியில் நடைபெறும் பகுத்தறிவாளர் கழக பொன் விழா நிறைவு மாநாட்டை விளக்கி மாவட்டங்களில் சுவ ரெழுத்து பிரச்சாரம் செய்வது எனவும் ,மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளில் துண்டறிக்கை வழங்குவது எனவும் இக்கூட் டம் ஏகமனதாக தீர்மானிக் கிறது.
தீர்மானம் : 5
மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பொன்விழா நிறைவு மாநாட்டை விளக்கி தெருமுனை கூட்டங் கள் ஒலிபெருக்கி விளம்பரங் கள் செய்து மாநாட்டிற்கு அதிகமான பொதுமக்களை ஈர்ப்பது என இக்கூட்டம் தீர் மானிக்கிறது.
தீர்மானம் : 6
மாநாடு வெற்றிபெற நிதி திரட்டிட அனைத்து தோழர் களும் முழுவேகத்தில் செயல் படுவது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் : 7
இயக்க இதழான விடுதலை, உண்மை, தி மார்டன் ரேஷ னலிஸ்ட், பெரியார் பிஞ்சு ஆகி யவற்றுக்கான சந்தாக்களை அதிகப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள இக்கூட்டம் தீர் மானிக்கிறது.
இறுதியில் விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வே.இரகுநாதன் நன்றி கூறிட கூட்டம் இரவு 7.30க்கு முடிவுற்றது.
முன்னதாக அன்று காலையிலேயே செஞ்சி நகருக்கு வந்திருந்த மாநில பகுத்தறிவா ளர் கழக தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் வி. மோகன், மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் இரா.சிவக் குமார், மாநில துணைத் தலைவர்கள் புதுச்சேரி ஆடிட் டர் இரஞ்சித்குமார், தஞ்சை கோபு.பழனிவேலு, திருவாரூர் மாவட்டஆசிரியரணி தலை வர் சு.ஆறுமுகம் ஆகியோர் செஞ்சி கோபண்ணா, செஞ்சி வே.இரகுநாதன் ஆகியோ ரோடு மாநாடு நடைபெறும் அரங்கையும், ஊர்வல வழியை யும் பொதுக்கூட்ட இடத்தை யும் பார்வையிட்டனர்.
தொடந்து செஞ்சி பேரூ ராட்சி மன்ற தலைவரும், தமிழ் நாடு அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரான செஞ்சி. மஸ்தான் அவர்களது மகனுமான வழக்குரைஞர். திருமிகு. மொக்தியார் அலி அவர்களை சந்தித்து அவரு டன் கலந்துரையாடி விடை பெற்றனர்.
No comments:
Post a Comment