மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 2, 2022

மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு

மதுரை, ஏப்.2-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செய லாளராக கே.பாலகிருஷ்ணன் ஒருமன தாக மீண்டும் தேர்வு செய்யப்படடார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட் டுள்ள செய்திக் குறிப்பில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்.1ஆம் தேதி வரை மதுரையில் நடைபெற்றது. மாநாட்டின் நிறைவு நாளில்  80 பேர் கொண்ட மாநிலக்குழுவிற்கு 79 பேர் தேர்ந் தெடுக்கப்பட்டனர். கட்சியின் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப் பட்டார். மேலும் 15 பேர் கொண்ட செயற்குழுவும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது. ஏப்ரல் 6 முதல் 10 ஆம் தேதி வரை கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெறும் 23-ஆவது அகில 

இந்திய மாநாட்டிற்கு தமிழ்நாட்டி லிருந்து 50 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். 

5 பேர் கொண்ட மாநில கட்டுப் பாட்டுக்குழுவிற்கு தோழர். ப. சுந்தர ராசன் தலைவராக தேர்வு செய்யப் பட்டார்.

இம்மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், உ.வாசுகி, பி.சம்பத், அ.சவுந்தரராசன், ஏ.கே.பத்மநாபன், சுதா சுந்தரராமன் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர். பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் உள்பட 553 பேர் கலந்து கொண்டனர்.

பேட்டி

மாநிலச் செயலாளராக தேர்வு செய் யப்பட்ட பின்னர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப் போது அவர் கூறியதாவது:

 “பாஜகவை எதிர்த்து நடைபெறும் கூட்டுப்போராட்டங்களை நாங்கள் முன்னெடுப்போம். இன்றைக்கு ஆட்சி யில் இருக்கிற திமுக அறிவித்திருக்கின்ற பல அறிவிப்புகளை வரவேற்கின்ற அதே நேரத்தில், மேலும் பல திட்டங்களை, வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்துவோம்.

ஒரு நட்பு கட்சி என்கிற முறையில், திமுகவை வலியுறுத்துகிற, இதை நிறை வேற்றுங்கள் என்று கேட்கிற வகையில் நாங்கள் முயற்சிகளை மேற்கொள்வோம். அதேசமயத்தில் மக்களுடைய வாழ்வா தார பிரச்சினைகள் என்று வருகிறபோது, வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிக் கொண்டிருக்கிறது, விலைவாசி ஏறிக் கொண்டிருக்கிறது. 

பல இடங்களில் தொகுப்பூதியம், மதிப்பூதியத்தின் அடிப்படையில்தான் ஊழியர்கள் பணி நியமனம் செய்யப் படுகிறார்கள். 

சிறு குறு தொழில்கள் முற்றிலும் நாசமாகிப் போய்க்கிடக்கிறது.

வரக்கூடிய நாட்களில் இதுபோல பாதிக்கப்படக்கூடிய மக்களின் வாழ் வாதாரப் பிரச்சினைகளை மய்யப்படுத்தி, நாங்கள் தனியாகவும் போராடுவோம், எங்களுடன் ஒத்த கருத்துடன் பய ணிக்கும் அமைப்புகளை இணைத்துக் கொண்டும் போராடுவோம்.

படிப் படியாக தமிழ்நாட்டில் ஒரு இடதுசாரி ஜனநாயக மாற்றை உருவாக்குகிற பணியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வது என்பதை தீர்மானித்துள்ளோம்.

தமிழ்நாடு அரசு ஆணவப் படு கொலைகளைத் தடுப்பதற்கு தனிசட்டத் தை இந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment