தமிழ்நாடு கல்விக்கொள்கையை வடிவமைக்க குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 7, 2022

தமிழ்நாடு கல்விக்கொள்கையை வடிவமைக்க குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஏப். 7- தமிழ்நாடு அரசின் கல்விக் கொள்கையை வடிவமைக்க சான்றோர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைத்துள்ளார் முதலமைச் சர் மு..ஸ்டாலின்.

அறிவை விரிவு செய்; அறிவியல் புதுமை செய்!’’ என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அந்த வகையில், வருங்காலத் தலைமுறைகளின் அறிவை விரிவு செய்து வளர்த்திடவும்; அறிவியல் புதுமைகளைப் பூத் திடச் செய்திடவும்; இளந்த ளிர்களின் உள்ளங்களில் புதிய புதிய சிந்தனைகளை விதைத்து வளர்த்திட வேண் டியதும் நமது இன்றியமையாத கடமை என்பதை உணர்ந்து, இதுவரை, நாட்டில் பல்வேறு கல்விக் கொள்கைகள் உரு வாக்கப்பட்டு, நடைமுறைப் படுத்தப் பட்டிருக்கின்றன. எனினும், இன்றைய அறிவியல் யுகம் நொடிதோறும் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஒருசில ஆண்டுகளுக்கு முன் கனவில்கூட எண்ணமுடியாத சில புதுமைகள், இன்றைக்கு மலர்ந்து அறிவு மணம் பரப்பு கின்றன. இன்றைய அறிவியல் நாளை பழைமை அடைவது திண்ணம். எனவே, மாணவர் கள் வருங்காலத்தின் அறிவி யல் விடியலைக் காண்பதற் கேற்ப, கல்வி வளர்ச்சிக்கேற்ப புதிய பரிமாணங்களில் திட் டங்கள் உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட் டாயமாகிறது.

அந்தவகையில், கடந்த 2021-2022ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில்தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்க ளுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை இந்த அரசு அமைக் கும்’’ என அறிவிக்கப்பட்டிருந் தது. அந்த அறிவிப்பைச் செயல் படுத்தும்விதமாக, தமிழ்நாட் டில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்திட, பின்வரும் சான்றோர்கள் அடங்கிய குழு வினை அமைத்து முதலமைச் சர் மு..ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

இக்குழுவின் தலைவராக டில்லி உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதியரசர் .முருகே சன், உறுப்பினர்களாக சவீதா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் எல்.ஜவஹர்நேசன், தேசிய கணித அறிவியல் நிறுவனத் தின் ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் இராமா னுஜம், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், மாநி லத் திட்டக்குழு உறுப்பினர் பேராசிரியர் இராம.சீனுவா சன், யூனிசெப் நிறுவனத்தின் மேனாள் சிறப்புக் கல்வி அலுவலர் முனைவர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், உலக சதுரங்க வாகையாளர் விஸ்வ நாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, கல்வி யாளர் துளசிதாஸ், கல்வியியல் எழுத்தாளர் முனைவர் .மாடசாமி, நாகப்பட்டினம் மாவட்டம், கிச்சான்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இரா.பாலு, அகரம் அறக்கட்டளை ஜெயசிறீ தாமோதரன் ஆகியோர் நிய மிக்கப்பட்டுள்ளனர்

இக்குழுவானது புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment