தமிழர் தலைவர் புறப்பட்டார்!
உரிமை மீட்புப் போருக்கு
நாகர் கோவிலில் தொடங்கியது
உரிமை காக்கும் போராட்டம்
தமிழின மாணவத் தோழர்களே!
கல்வி உரிமைக் காத்திடவே!
தோளை உயர்த்தி வாருங்கள்
தொல்லையை மாய்க்க வாருங்கள்!
‘நீட்'என்ற நச்சுத் தேர்வை
நிதமும் எதிர்த்துப் போரிடுவோம்
நாட்டுக்கு கேடு ‘நீட்'டாகும்
உயர்க்கல்வி வாய்ப்புக்கு வேட்டாகும்
எளிதாய் உள்ளது கல்வி முறை
ஏழை எளியவர் கற்றிடவே!
அழித்து அதனை ஒழித்திடவே!
ஆணவம் ‘நீட்'டைத் திணிக்கிறது!
தேசியக் கல்விக் கொள்கையா?
தேசியக் கல்விக் கொள்ளையா?
காசு படைத்தவன் வாழ்வுக்குக்
கள்ளத் தனமாய் வந்ததுதான்
தேசியக்கல்விச் சூதாட்டம்
ஏழை மாணவர் உயர்வுக்கு
எள்முனை அளவும் உதவாது!
எதிர்த்து நின்று வென்றிடுவோம்!
- குடந்தை இளஞ்சேட்சென்னி
No comments:
Post a Comment