தொடர் சுற்றுப்பயணத்தில் உள்ள நிலையில், இன்று (22.4.2022) தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனியார்த் துறையிலும் அய்.அய்.எம். போன்ற பல நிறுவனங் களில் - இட ஒதுக்கீட்டினை -குறிப்பாக மண்டல் கமிஷன் பரிந்துரைப்படியும், அதற்கு முன்னால் எஸ்.சி., எஸ்.டி., போன்ற ஒடுக்கப்பட்டோருக்கும் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அரசு ஆணை பிறப்பிக்கவேண்டும் என்ற நமது நீண்ட நாளைய கோரிக்கைகள், மானியக் கோரிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளதை மிகமிக பாராட்டி வரவேற்கிறோம்.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில்கூட, அங்கே உள்ள கருப்பின இதர மக்களின் வளர்ச்சி - முன்னேற்றம் சமமாக அமையவேண்டும் என்பதால், தனியார்த் துறையில் இட ஒதுக்கீட்டினை செயல் படுத்துகிறார்கள்.
இதனால் 'தகுதி, திறமை' போய்விடும் என்ற போலி வாதத்திற்கு இடமில்லை என்பது இதன்மூலம் புரிய வேண்டும் என்பதால், அதனை சுட்டிக்காட்டுகிறோம்!
அரசின் அனுமதி, சலுகைகள் அனைத்தும் பெறும் தனியார் நிறுவனங்கள், மக்கள் வரிப்பணம் அது என்பதை உணர்ந்து, மறுப்பின்றி தாமே இட ஒதுக்கீடு தர முன்வராத நிலையில், இது அவசியம் தேவை!
ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி, பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நிலையில், இதுதான் சமூகநீதியைக் காப்பாற்றும் அருமருந்து.
இது சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் என்பதற்கான மற்றுமோர் சரித்திர சான்று!
தலைவர்,
திராவிடர் கழகம்
22.4.2022
No comments:
Post a Comment