சிவகங்கை, ஏப்.1 சிவகங்கை மாவட்ட கழகக் கலந் துரையாடல் கூட்டம் மண்டல தலைவர் சாமி.திராவிடமணி தலைமையில் நடைபெற்றது. மண்டல செயலாளர் அ.மகேந்திரராசன் வரவேற் புரையாற்றினார்.
கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து தலைமைக் கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா உரையாற்றினார். மாவட்ட தலைவராக கழகத் தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்ட வழக் குரைஞர் ச.இன்பலாதன் அவர்களுக்கு மண்டல தலைவர் சாமி திராவிடமணி பயனாடை அணி வித்து வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசும் போது நீட் தேர்வு எதிர்ப்பு , புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு ஆகியவற்றை வலியுறுத்தி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 89 வயதிலும் தன் னலம் பாராமல் கடும் வெய்யிலில் மேற்கொள்ள விருக்கும் பரப்புரை பெரும் பயணத்தை பற்றி விரிவாக எடுத்துக் கூறியும், கழக ஏடுகளுக்கு அதிக அளவில் சந்தாக்களை சேர்ப்பது குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினார். மீண்டும் சிவகங்கை மாவட்ட கழகம் புத்தெழுச்சியோடு செயல்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி பேசினார்.
தொடர்ந்து மாவட்ட தலைவர் வழக்குரைஞர் ச.இன்பலாதன் உரையாற்றுகையில்,
''கரோனா அச்சம் காரணமாக வீட்டுக்குள்ளே இருந்த நான் ஆசிரியர் அவர்கள் பேசியதை கேட்டு விடுதலையாகி வந்துவிட்டேன். ஆசிரிய ருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறினார்.
தீர்மானங்கள்
1. அண்மையில் மறைந்த சிவகங்கை மாவட்ட தலைவர் உ.சுப்பையா, காரைக்குடி மாவட்ட மேனாள் செயலாளர் வீர.சுப்பையா ஆகியோர் மறைவிற்கு இக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
2. நீட் தேர்வு எதிர்ப்பு புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநில உரிமை மீட்பு ஆகியவற்றை வலியுறுத்தி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேற்கொள்ளும் பரப்புரை பெரும் பயணக் கூட்டம் வரும் 7 ஆம் தேதி காரைக்குடியில் நடை பெறவுள்ளதையொட்டி தோழர்கள் பெருமளவில் பங்கேற்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
3. மேற்கண்ட பயணத்தின் நோக்கங்களை விளக்கி சிவகங்கை மாவட்டம் முழுவதும் தெருமுனை பிரச்சார கூட்டங்களை நடத் துவது.
4. கழக ஏடுகளான விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, தி மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆகியவற்றிற்கு தொடர்ந்து சந்தா சேர்த்துத் தருவது என முடிவு செய்யப்பட்டது.
5. பரப்புரை பெரும் பயணத்தில் வரும் கழகத் தலைவருக்கு சிவகங்கை மாவட்ட எல்லையான மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் எழுச்சி மிக்க வரவேற்பு அளிப் பது என்று முடிவு செய்யப்பட்டது.
6. சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து தந்தை பெரியார் படம் கடந்த ஆட்சியில் அகற்றப்பட்டது. மீண்டும் அதே இடத்தில் பெரியார் படத் தினை வைக்க உரிய முயற்சிகளை செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் செ.தனபாலன், மாவட்ட துணை செயலாளர் வைகை ஆ.தங்கராசன், மாவட்ட அமைப் பாளர் ச.அனந்தவேல், திருப்பத்தூர் ஒன்றிய தலைவர் மு.தமிழ்வாணன், சாலைக்கிராமம் ஒன்றிய அமைப்பாளர் தி.க.பாலு,மேனாள் மாவட்ட செயலாளர் வேம்பத்தூர் ஜெய ராமன், மாவட்ட விவசாய அணி செயலாளர் பெரிய கோட்டை சந்திரன், மானாமதுரை ச.வள்ளிநாயகம், மருத்துவர் இ.மலர்க்கன்னி, மருத்துவர் இ.இராஜராஜன், பு.கார்த்தியாயினி, கோவனூர் மீனாட்சி, துரைசிங்கம், ஓவியர் முத்துக்கிருஷ்ணன், செல்லமுத்து, போ.இரவிச்சந்திரன்,
தமிழாசிரியர் நீ.இளங்கோ, தமிழ்க்கனல், திருப்புவனம் இராஜாங்கம், பெரமனூர் குமார்,
சிவகங்கை சோணை உள்ளிட்ட தோழர் கள் பங்கேற்றனர். முடிவில் நகர செயலாளர் இர.புகழேந்தி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment