இலங்கை தமிழர்களுக்கு உதவி, நீட்தேர்வு விலக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 1, 2022

இலங்கை தமிழர்களுக்கு உதவி, நீட்தேர்வு விலக்கு

பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு..ஸ்டாலின் சந்திப்பில் அளிக்கப்பட்ட மனு விவரம்

 

புதுடில்லி,ஏப்.1- டில்லிக்கு சென்றுள்ள திமுக தலைவர்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் அவர்கள்  பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, இலங் கைத் தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவி செய்வதற்கு தேவை யான நடவடிக்கைகள் எடுக்கும் படி கேட்டுக் கொண்டார். மேலும், நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு திட் டங்கள் குறித்த கோரிக்கை மனு வையும் அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்ப தாவது: காவிரியின் குறுக்கே மேகேதாட்டு உள்ளிட்ட எந்த ஒரு அணை கட்டும் திட்டத் துக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என்று நீர்வளத்துறை அமைச்சகத்துக்கும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப் படுவ தும், தாக்கப்படுவதும் தொடர்ந்து நடக்கிறது. பாக் வளைகுடா பகுதியில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாது காப்பதுடன், அவர்களின் பாது காப்பையும் உறுதி செய்ய வேண்டும். மீனவர்கள் பிரச்சி னைக்கு நிரந்தர தீர்வு காண்ப துடன், கச்சத்தீவை மீட்டு தமிழ் நாடு மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்.

தல்சேர் மற்றும் அய்பி வேலி பகுதியில் இருந்து தினமும் 72 ஆயிரம் டன் நிலக்கரி கொண்டு வருவதற்கு கூடுதலாக ரயில் ரேக்குகளை ஒதுக்க வேண்டும். கடந்த பிப்ரவரி வரை நிலு வையில் உள்ள ஜிஎஸ்டி இழப் பீடான ரூ.13,504.74 கோடியை உடனடியாக விடுவிக்க வேண் டும். ஜூன் மாதத்துடன் முடியும் இழப்பீட்டு காலத்தை குறைந்த பட்சம் 2 ஆண்டுகளுக் காவது நீட்டிக்க வேண்டும்.

நீட் தேர்வு விலக்கு

மருத்துவ மாணவர் சேர்க்கை  கொள்கை மற்றும் நீட் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. எனவே, மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் படிப்புகளுக்கான மாண வர் சேர்க்கையை 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்த தமிழ்நாடுஅரசுக்கு அனு மதி அளிக்க வேண்டும். உக்ரை னில் பாதிக்கப்பட்ட மாணவர் களின் படிப்பு தடைபட்டுள்ள தால், இந்தியாவில் உள்ள மருத் துவக் கல்லூரிகளில் அவர்கள் தங்கள் படிப்பை தொடர வழி வகைகளை கண்டறிய வேண் டும்.

பிரதமரின் வேளாண்மை பயிர் பாதுகாப்பு திட்டத்தில் ஒன்றிய அரசின் பங்கு பிரீமியம் தொகையை முந்தைய அளவுக்கு எவ்வித கட்டுப்பாடும் இன்றி உயர்த்த வேண்டும். 2020-- 2021 ராபி பருவத்துக்கான ஒன்றிய அரசின் பிரீமியம் மானியத்தை விடுவிக்க வேண்டும்.

பாதுகாப்பு ஆராய்ச்சி கட்டமைப்பு திட்டத்தின்கீழ் (டிடிஅய்எஸ்) தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் வழித்தட திட்டத்தில், 2 பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆய்வுக் கூடங் களை அமைக்க வேண்டும்.

சேலம் இரும்பு ஆலையில் உள்ள கூடுதல் நிலத்தை பாது காப்பு தொழில் பூங்காவுக்காக தமிழ்நாடு அரசுக்கு விரைவாக வழங்க வேண்டும். சென்னை அடுத்த மப்பேட்டில் அமையும் மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க்குக்கு 11 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்க தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட வேண்டும்.

கல்விக் கொள்கை

ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் திட்டத்துக்கு ஒன்றிய, மாநில அரசுகள் தலா 50 சதவீத பங்கு அடிப்படையில் ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த ஆண்டுக் கான ஹஜ் பயணத் துக்கு புறப்படும் இடமாக சென் னையை அறிவிக்க வேண்டும்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அல்லல்படும் இலங்கைத் தமி ழர்களுக்கு தேவையான அத் தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந் துகளை தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன் படுத்திய அணுக்கழிவுகளை அங்கிருந்து அகற்றி ரஷ்யா வுக்கே திருப்பிஅனுப்ப நட டிக்கை எடுக்க வேண்டும். நரிக் குறவர், குருவிக்காரர் சமூகங் களை தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். -இவ்வாறு மனுவில் முதல மைச்சர் மு..ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment