திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை த.மு.மு.க. நிறுவனர் குணங்குடி ஆர்.எம்.அனிபா மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். உடன் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (31.3.2022, சென்னை)
கிருட்டிணகிரி மாவட்ட கழகத் தலைவர் த.அறிவரசனின் மகன் பெரியார் செல்வம் மணவிழா மகிழ்வாக கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றனின் அவர்களிடம் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கினார். (31.3.2022 பெரியார் திடல்)
விடுதலை சந்தா
திராவிடர்கழக குமரிமாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் விடுதலை இதழுக்கு திமுக இளைஞரணி பொறுப்பாளர் நெய்யூர் தா.ஜெபராஜ் ஆண்டு சந்தா வழங்கினார் உடன் திமுக தோழர் இஸ்மாயில்.நன்கொடை
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் நாகர்கோவில் பொதுக்கூட்டத்திற்கு குமரிமாவட்டம் கல்லுக்கூட்டம் பேரூராட்சி தலைவர் மனோகர தாஸ் குமரி மாவட்ட கழக தலைவர் மா.மு. சுப்பிரமணியத்திடம் நன்கொடை வழங்கினார். உடன் மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன், பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு, இலக்கிய அணி செயலாளர் பா. பொன்னுராசன்.
No comments:
Post a Comment