சடங்குகள் ஏற்படுத்தியதன் நோக்கம் எல்லாம் அவற்றால் ஜாதியை நிலைநாட்டவேயன்றி வேறல்ல; எதற்காகச் சடங்குகளைச் செய்ய வேண்டும்? அதனால் என்ன பயன்? என்று கேட்டால், ஒன்றும் தெரியாது என்று சொல்லுவார்களேயொழிய, அதன் அவசியம் இன்னது என்று சொல்ல முடியாது. யாரைக் கேட்டாலும், 'இது எங்கள் ஜாதி' வழக்கம். 'அது அவர்கள் ஜாதி வழக்கம்' என்றுதான் சொல்லுவார்கள். அவரவர்கள் ஜாதியைப் பாதுகாக்கவே ஒவ்வொரு விதமான சடங்குகள் என்பதாக ஆக்கி நிரந்தரமாக நம்மைப் பிரித்து வைக்கவே இந்தச் சடங்கு முறையை ஏற்படுத்தினார்கள்.
(நூல்: 'வாழ்க்கைத் துணை நலம்')
No comments:
Post a Comment