கீவ், ஏப். 5- உக்ரைன் நாட் டில் கருங்கடல் கடற்கரை யோரம் அமைந்துள்ள துறைமுக நகரமான ஒடெசாவில் எரிபொருள் கிடங்கு மீது ரஷ்ய படை கள் சூரிய உதயத்துக்கு முன்பாகவே ஏவுகணை தாக்குதல்களை நடத் தின. இந்த நகரம் அடுத் தடுத்த தாக்குதல்களால் அதிர்ந்து போனது. பெருமளவில் கரும்புகை மண்டலமும் உருவானது.
உக்ரைன் உள்துறை அமைச்சரின் ஆலோசகர் ஆண்டன் ஹெராஷ் செங்கோ சமூக வலைத் தளத்தில் குறிப்பிடுகை யில், சில இடங்களில் தீப் பற்றி எரிந்ததாக தகவல் கள் வெளியாகி உள்ளன. சில ஏவுகணைகளை விமா னப்படையினர் சுட்டு வீழ்த்தினர் என தெரிவித்துள்ளார்.
ஒடெசா நகரில் முக் கியமான கட்டமைப்பை ரஷ்ய ஏவுகணை தவிடு பொடியாக்கியது. இங்கு ராணுவம் பயன்படுத்தி வந்த எரிபொருள் சுத்தி கரிப்பு ஆலையை ரஷ்ய படைகள் தாக்கி அழித் துள்ளதாக மற்றொரு தகவல் கூறுகிறது.
இந்த நகர வான்வெளி யில் பல்வேறு டிரோன் கள் வரிசைகட்டி அணி வகுத்ததாகவும் அங்கி ருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நகரில் 10 லட்சம் பேர் வசிக்கிறார்கள். இந்த நக ரில் நடத்தப்பட்ட தாக் குதல் பற்றி ரஷ்ய ராணுவ அமைச்சகம் கூறுகையில், ஒரு எண்ணெய் சுத்திக ரிப்பு ஆலையையும், 3 எண்ணெய் கிடங்குகளை யும் ரஷ்ய படைகள் தாக்கி அழித்தன. இவற்றில் இருந்துதான் மைக்கோ லெய்வ் நகரில் உள்ள உக்ரைன் ராணுவத்துக்கு எரிபொருள் விநியோகம் ஆனது என தெரிவித்தது.
உக்ரைனின் புச்சா நகரத்தில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறின. அங்கு தெருக்களில் வைத் துள்ள குப்பை கொட்டும் தொட்டிகளில் பொது மக்களில் 20 பேரது உடல் கள் போடப்பட்டிருப்பது படங்களுடன் வெளி யாகி உள்ளது.
தலைநகர் கீவை சுற் றியுள்ள நகரங்கள், சிறிய நகரங்கள் ஆகியவற்றில் ரஷ்ய படைகள் மீண்டும் அமர்த்தப்பட்டு, கடுமை யாக சண்டையிட்டு வரு கின்றன. இரு தரப்பிலும் அழிக்கப்பட்ட கவச வாக னங்கள், ராணுவ உபகர ணங்கள் தெருக்களிலும், வயல்களிலும் சிதறிக் கிடந்தன.
இந்த சண்டைகளுக் குப்பின் கீவ் நகரைச் சுற் றிலும் உள்ள புறநகர்க ளில் ரஷ்ய படைகள் பின் வாங்கி உள்ளன. இதற் காக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ் கியை இங்கிலாந்து பிரத மர் போரிஸ் ஜான்சன் தொலைபேசியில் அழைத்து பாராட்டி னார். இதை சுட்டுரையில் பதிவிட்ட விளாடிமிர் ஜெலன்ஸ்கி, இங்கிலாந்து சக்தி வாய்ந்த நட்பு நாடு என குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கில் தனது படைகள் தங்கள் பாது காப்பு திறன்களை அதிக ரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment