எழும்பூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும், பெரியார் திடலுடன் தொடர்புடன் இருப் பவருமான சட்டப் பேரவை உறுப்பினர் இ.பரந்தாமன் அவர்களது தந்தையார் இந்திரன் அவர்கள் நேற்று மாலை (25.4.2022) உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.
சட்டப் பேரவை உறுப் பினர் தோழர் இ. பரந்தாமன் நேற்று மாலை பெரியார் திடல் நிகழ்ச்சியில் இருக் கும்போது இச்செய்தி அறிந்து இல்லத் திற்கு விரைந்தார்.
இரவு நாம் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கலும், ஆறு தலும் தெரிவித்தோம்.
- கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
26.4.2022
குறிப்பு: இன்று இறுதி நிகழ்வுகள் நடைபெறும்.
No comments:
Post a Comment