'நீட்', புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும்பயண தொடக்கவிழா பொதுக் கூட்டத்திற்கு நாகர்கோவில் மாநகருக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட கழக தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில் பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யம், தந்தை பெரியார் சிலை முன்பாக, நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு முனைவர். துரை சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்), இரா. ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்), இரா. குணசேகரன் (மாநில அமைப்பாளர்), வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்) பெரியார் வீர விளையாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் ப.சுப்பிரமணியம்,நெல்லை மண்டல தலைவர் சு.காசி, கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன், ம.தயாளன் (பொதுக்குழு உறுப்பினர்), ஞா.பிரான்சிஸ் (மாவட்ட அமைப்பாளர்), ச.நல்ல பெருமாள் (மாவட்ட துணைத் தலைவர்), மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்) மாவட்ட மகளிரணி தலைவர் இந்திரா மணி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மஞ்சு குமாரதாஸ், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தலைவர் எஸ். குமாரதாஸ், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ், செயலாளர் எஸ்.அலெக்சாண்டர், அமைப்பாளர் மு.சேகர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் ச.ச.கருணாநிதி, மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூர்பாண்டியன், பகுத்தறிவாளர்கழக மாவட்ட செயலாளர் பெரியார் தாஸ், அமைப்பாளர் இரா.லிங்கேசன், நாகர் கோவில் மாநகர துணைத் தலைவர் கவிஞர் எச். செய்க்முகமது, தோழர்கள் பொன் பாண்டியன், ரெகு, ராஜன், கோகுல்,பாலகிருஷ்னன், திமுக தொழிற்சங்க பொறுப்பாளர் க.வ.இளங்கோ, திமுக ஒன்றிய இளைஞரணி செயலாளர் நெய்யூர் தா.ஜெபராஜ், திமுக மாணவரணி செயலாளர் ஆன்டனி ராஜ், மற்றும் பலரும் கலந்துகொண்டு கழக தலைவருக்கு பயனாடைகள், பூங்கொத்துகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
No comments:
Post a Comment