சியோல், ஏப். 2- தென் கொரிய விமானப் படையின் இரண்டு பயிற்சி விமானங்கள் நடு வானில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மூன்று விமானிகள் உயிரிழந்துள்ளதாக தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் ஒருவர் படுகாயமடைந்து உள்ளார். தென் கொரியாவின் தென்கிழக்கு நகரமான சச்சியோனில் உள்ள விமானப்படை தளத்திற்கு அருகே இந்த விபத்து நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் விமானப்படை இதுவரை உயிர் சேதம் குறித்து தெரிவிக்கவில்லை. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ஆய்வு செய்து வருவதாக விமானப் படை தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment