மேனாள் அமைச்சரும், தி.மு.க. மதுரை மாநகர வடக்கு மாவட்ட செயலாளருமான பொன்.முத்துராமலிங்கம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து வரவேற்று, பிரச்சார பயண நன்கொடையாக ரூ.50 ஆயிரத்தினை வழங்கினார். மதுரையில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு - புதிய தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு - மாநில உரிமைகள் பறிப்பு எதிர்ப்புப் பரப்புரை பயணப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்
கே.எஸ்.அழகிரி, மேனாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் மற்றும் பல்வேறு கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று உரையாற்றினர் (மதுரை, 6.4.2022).
No comments:
Post a Comment