வாரணாசியில் சமூகநீதிக் குரல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 22, 2022

வாரணாசியில் சமூகநீதிக் குரல்!

 வாரணாசி (காசி) என்றதும் இந்துக்களின் புனிதத்தலம் என்று பிம்பத்தை உருவாக்கி வைத்துள்ளனர். காசிக்குச் சென்று அங்கு பாயும் கங்கையில் குளித்து விட்டால் செய்த பாவங்கள் எல்லாம் பஞ்சாய்ப் பறந்து விடுமாம். காசியில் இறந்தால் முக்தியாம். அங்கு எங்கு பார்த்தாலும் சாமியார் மடங்கள் - நிர்வாண சாமியார்கள், எரிந்தும், எரியாமலும் இருக்கக் கூடிய பிணங்களை அங்கே ஓடும் கங்கையில் வீசி எறிவார்கள்.

இந்தியாவில் எந்தப் பகுதியில் இறந்திருந்தாலும், இறந்தவர்களை எரித்த சாம்பலைக் கொண்டு வந்து காசியில் கங்கையில் கரைத்தால், இறந்தவர்களுக்குச் சட்டென்று மோட்சக் கதவு திறக்குமாம்.

கிழட்டுப் பசுக்களை கங்கையில் தள்ளி விடுவார்களாம்! இந்த இலட்சணத்தில் கோமாதா குலமாதாவாம். இங்குதான் அண்மையில் இந்தியப் பிரதமர் தாம் செய்த பாவங்களை எல்லாம் போக்கிக் கொள்ள முழுகி முழுகி எழுந்தார். காசி விசுவநாதன் கோயிலை கோடிக்கணக்கில் செலவு செய்து புனருத்தாரணம் செய்தார்.

அந்தக் காசியிலே சமூகநீதிக்கான அஸ்திவாரக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றால், அது ஆச்சரியமாகத்தான் இருக்கும் - ஆனாலும் அது உண்மைதான்!

2.3.2022 அன்று டில்லியில் நடைபெற்ற சமூக நீதிக்கான கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தின் தொடர்ச்சியாக, மாநில  அளவிலான கூட்டு நடவடிக்கையின் முதல் கூட்டம் (ஜே..சி.) 16 ஏப்ரல் 2022 சனிக்கிழமை அன்று வாரணாசியில் (சுரபி இன்டர்நேஷனல் ஹோட்டல்) மாலை 6.30 மணி முதல் நடைபெற்றது.

.பி. மாநில ஜே..சி. ஒருங்கிணைப்பாளரும், .பி. பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் யூனியன் வங்கி பிற்படுத்தப் பட்டோர் நல சங்கத்தின் பொதுச் செயலாளருமான டாக்டர் அமிர்தான்சு ஏற்பாட்டில், சேவா அமைப்பின் ஆதரவோடு சிறப்பாக துவங்கியது.

.பி. யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் தலைவர் பினோத் பிரசாத் வரவேற்புரையாற்றினார். டாக்டர் அமிர்தன்சு முக்கிய குறிப்பு உரையை வழங்கியதோடு கூட்டத்தை ஏற்பாடு செய்வதன் நோக்கத்தை விரிவாக விளக்கினார்.

சிறப்புப் பேச்சாளர்கள்: பவுத்த பிரியா சிறீ முசாஃபிர், வருமான வரித்துறையின் உதவி ஆணையர் மற்றும் அனைத்து இந்திய தாழ்த்தப்பட்ட, பழங்குடியின நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர், பங்கஜ் சேத் (வருமான வரித்துறை.) .பி. மிகவும் பிற்படுத்தப்பட்டோர்  கூட்டமைப்பின் தலைவர், ரவிந்திர ராம். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கட்டமைப்பு, பீகார், வி.சி.யாதவ், ஷிணிகீகி-ஹிறி, ராஜேஷ்குமார், மாவட்ட வளர்ச்சி அதிகாரி வாரணாசி, சிவ்நாத், தொழிற்சங்கத் தலைவர், ராகேஷ், ஷிணிகீகி பீகார், சுபாவதி பிரபுத், அரசு பள்ளி ஆசிரியர், வாரணாசி மற்றும் சில சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் நிகழ்ச்சியில் உரையாற்றினர்.

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செய லாளரும், சமூக நீதிக்கான கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப் பாளருமான கோ.கருணாநிதி, நாட்டில் சமூக நீதி சக்திகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், பிற்படுத்தப்பட்டோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் விரிவாக எடுத்துரைத்தார்.

.பி. யூனியன் வங்கி சங்கத்தின் மேனாள் தலைவர் டி.டி.பிரசாத் நன்றியுரை ஆற்றினார். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலச் சங்கத் தலைவர் அருண் பிரேமி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

மிகக் குறுகிய கால அறிவிப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியாக இருந்தபோதிலும், நிகழ்வில் பெண்கள் மற்றும் மருத்துவ மற்றும் பொறியியல் மாணவர்கள் உள்பட 160 உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி 6.30 மணிக்கு துவங்கி இரவு 10.15 மணி வரை (கிட்டத்தட்ட 4 மணி நேரம்) நீடித்த போதிலும், வருகை தந்த அனைவரும் கலந்துரை யாடல்களை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.

மேலும் சில பிரதிநிதிகள் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் மாவட்ட அளவில் எடுக்கப்படும் என்றும், இந்த முயற்சிகளுக்கு அவர்களின் முழு ஆதரவையும் உறுதி செய்வதாகவும் நம்பிக்கை தெரிவித்தனர்.

வாரணாசியில் நடைபெற்ற ஜே..சி. கூட்டம், விவாதிக்கப்பட்ட பிரச்சினைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வை ஊட்டியது.

.நிகழ்வுக்குப் பின்னர் சந்தித்த  பேராசிரியர்கள் மற்றும் வழக்குரை ஞர்கள் அதை வரவேற்று தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

சமூகநீதிக்கான ஜே..சி. கூட்டத்தை நடத்துவதற்கு ஏனைய மாநிலங் களிலும் இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

தென்னகத்தில் சமூக நீதிக் குரலும், வளமான சிந்தனையும் ஓங்கி நிற்பதுபோல வட மாநிலங்களில் காண்பது அரிது. காரணம் அங்கு சுயமரியாதை இயக்கம் திராவிட இயக்கம் போன்ற சமூக அமைப்புகள் வளர்ந்தோங்கவில்லை.

தந்தை பெரியார் போன்று களத்தில் இறங்கி மக்களைச் சந்தித்து, எழுச்சி உண்டாக்கப்படவில்லை. மதவாதம் தான் அங்கு தலையானதாகி விட்டது. அதை வைத்துப் பிழைப்பு நடத்த முடியும்.

பி.ஜே.பி. சங்பரிவார்கள் உயிர் வாழ்வது இந்த அடிப்படையில்தான். 'நீட்'டினால் பாதிக்கப்படுவோர் வட மாநிலங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களும்தான். ஆனாலும் 'நீட்'டுக்கு எதிரான வலுவான குரல் ஏன் எழவில்லை என்பது சிந்திக்கத்தக்கது.

இத்தகு சூழலில் வாரணாசியில் சமூகநீதி அடிப்படையில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இது .பி.யையும் கடந்து வடக்கே பிற மாநிலங்களிலும் துளிர் விடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

வாரணாசியில் இந்தக் கூட்டத்தைச் சிறப்பாக ஏற்பாடு செய்த டாக்டர் அமிர்தான்சு துவக்கியுள்ள 'எம் பவர்' என்ற அறக்கட்டளைக்கு வாரணாசியைச் சார்ந்த தொழிலதிபர் ஹீராலா மவுரியா 400 சதுர அடி நிலத்தை, அலுவலகம் ஒன்றை உருவாக்க நன்கொடையாக அளித்துள்ளது நம்பிக்கைதரும் தொடக்கமாகும்.

அந்த நன்கொடையாளரை அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கோ. கருணாநிதியும் (திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர்) நிர்வாகிகளும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து, தந்தை பெரியார் சிலை ஒன்றையும் அளித்தனர் என்பது பாராட்டுக்கும் மகிழ்ச்சிக்கும் உரியதாகும்.

நாடாளுமன்றத்தில் "தந்தை பெரியார் வாழ்க!" என்றும் "திராவிடம் வெல்க!" என்றும் குரல்கள் ஒலிக்கின்றன. தந்தை பெரியாரின் இந்தி மொழி பெயர்ப்பு இராமாயண நூலான "சச்சிராமாயண்' என்ற நூலை எடுத்துக்காட்டி பீகார் எம்.பி. மாநிலங்களவையில் முரசொலிக்கிறார்.

வடமாநிலங்களிலும் தந்தை பெரியாரின் தத்துவங்கள் பரவுவதுதான் மதவாத பாசிச கொடு நோய்க்கான தீர்வாக இருக்க முடியும்.

சமூக நீதிக்கான கூட்டுக் குழுவின் முயற்சிகள் வெல்லட்டும் - வாழ்த்துகள் - பாராட்டுகள்!

No comments:

Post a Comment