ஒவ்வொரு குடும்பத்திடமும் ஒரு லட்சம் ரூபாய் வரியாக பிடுங்கிய மோடி அரசு : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 5, 2022

ஒவ்வொரு குடும்பத்திடமும் ஒரு லட்சம் ரூபாய் வரியாக பிடுங்கிய மோடி அரசு : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

புதுடில்லி. ஏப். 5 நாள்தோறும் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர், நிதி அமைச்சரோ விலை உயர் விற்கு இன்னும் மேனாள் பிரதமர் கள்தான் காரணம் என்று கூறிக் கொண்டு இருக்கிறார்.

 இந்த நிலையில் மேனாள் நிதி அமைச்சர் .சிதம்பரம் ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் வரியாக சராசரியாக ஒவ்வொரு குடும்பத் தினரிடமிருந்தும் ஒரு லட்சம் ரூபாய் வரை பிடுங்கியுள்ளது என்று புள்ளிவிபரங்களோடு கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து காங் கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மேனாள் ஒன்றிய அமைச்சருமான .சிதம்பரம் கூறியதாவது:-

8 ஆண்டுகளில் மோடி அரசு எரிபொருள் வரியாக 26,51,919 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தியாவில் சுமார் 26 கோடி குடும்பங்கள் உள்ளன. அதில் ஒவ்வாரு குடும்பத்திடமிருந்தும் எரிபொருள் வரி வசூல் செய்யப் பட்டுள்ளது.

ஒவ்வொரு குடும்பத்தில் இருந் தும் சராசரியாக ஒருலட்ச ரூபாய் எரிபொருள் வரியாக ஒன்றிய அரசு வசூலித்துள்ளது. ஒரு சரா சரி குடும்பம் இவ்வளவு பெரிய தொகையை எரிபொருள் வரியாக செலுத்தியதற்கு ஈடாக என்ன கிடைத்தது என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment