காற்றுமாசால் மூளை பாதிப்புக்குள்ளாகும் எதிர்கால தலைமுறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 2, 2022

காற்றுமாசால் மூளை பாதிப்புக்குள்ளாகும் எதிர்கால தலைமுறை

காற்று இல்லாமல் நம்மால் சில நிமிடம் கூட இருக்க முடியாது. நாம் ஒரு நாளைக்கு 22 ஆயிரம் முறை சுவாசிக்கிறோம். நாம் சுவாசிக்கும் காற்றில் நைட்ரஜன், ஆக் சிஜன், கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, சல்பர் ஆக்சைடு, ஓசோன், மீத்தேன் என்று இன்னும் பல வாயுக்களும் கலந்துள்ளன. 

வளர்ந்துவரும் நாகரிகத்தாலும், வாக னங்களின் அதிகரிப்பாலும், தொழிற்சாலை களின் தொடர் இயக்கத்தாலும், காற்று மாசு படுவது அதிகரித்து வருகிறது.  காற்று மாசு படுவதால் பூமியில் ஆண்டுக்கு 90 லட்சம் முதல் 120 லட்சம் பேர் வரை மரணமடை கின்றனர்.

பக்கவாதம், மாரடைப்பு, நுரையீரல் நோய், புற்றுநோய் போன்ற நோய்களும் அதிகரித்த வண்ணமே உள்ளன.  காற்று மாசுபடுவதால் நுரையீரல் நோய் வரும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், காற்றும்   மூளையும் ஒன்றோடொன்று  நெருங் கிய தொடர்புடையன. காற்று மாசுபட்டால் மூளையிலும் பாதிப்பு ஏற்படும். 

 மூக்கில் உள்ள ஆல்பாக்டரி எபிதீலியம் எனும் உறுப்பு, நாம் வாசனையை உணர்வ தற்கு உதவுகிறது. இதுவே நம் மூளையையும் காற்றையும் தொடர்புபடுத்துகிறது. நமது மூக்கின் வழியாக உள்ளிழுக்கும் காற்றில் மாசு கலந்திருக்கும்போது, மாசு அளவைப் பொறுத்து பாதிப்பு ஏற்படுகிறது.

மாசுத்துகளின் அளவு அதிகமாக இருந் தால், நமது மூக்கில் இருக்கும் முடியானது துகள் உள்ளே செல்லாமல் தடுக்கிறது. இந்த துகளானது கொஞ்சம் சிறியதாக இருந்தால் நமது தொண்டைப் பகுதிவரை செல்கிறது. ஆனால், இந்த துகள் நுரையீரலை சென்ற டையாமல், நாம் இதை இருமல் மற்றும் தும்மல் வழியாக வெளியே தள்ளுகிறோம். 

இந்த துகள், மிகவும் நுண்ணிய அளவில் இருந்தால் ஆல்பாக்டரி எபிதீலியம் வழியா கச் சென்று மூளையில் படிந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே ஞாபகத்திறன் குறைந்து மூளை தன்னிலை இழக்கும் அபாயம் உள்ளது.

குழந்தைகளின் மூளையானது முதல் ஆயிரம் நாட்களில்தான் (அதாவது இரண் டரை வயதுக்குள்) 90 சதவீத வளர்ச்சியை பெறுகிறது. இந்த நாட்களில் குழந்தை, மாசு பட்ட காற்றை சுவாசித்தால், இந்த நச்சுப் பொருட்கள் மூளையில் உள்ள வெள் ளைப் படலத்தை பாதிக்கிறது.  இதனால் குழந்தை யின் அறிவுத்திறன் பாதிக்கப்படுகிறது. 

அதுமட்டுமல்லாமல் குழந்தையின் நடவடிக்கையிலும் மாறுதல் ஏற்படுகிறது. அந்தக் குழந்தையிடம் கோபமும் சமூகத் துக்கு எதிரான சிந்தனைகளும் அதிகரிக் கின்றன. நமது மரபணு குறிப்பிட்ட அளவு காற்றுமாசுபாட்டை எதிர்க்கும் திறனை வளர்த்துக்கொள்ளும் வகையில் உடல் தன்னை சிறிது மாற்றிக்கொள்கிறது. ஆனால் தொடர்ந்து காற்றுமாசு அளவிற்கு அதிக மாக இருக்கும் போது மாசுகளின் நுண் துகள் களை எவ்வித தடுப்புமின்றி மூளைக்கு கொண்டுசெல்லும் அபாயத்தை எதிர் காலத் தலைமுறை எதிர்கொள்ள நேரிடும், காற்று மாசு எதிர்கால மனிதகுலத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதிலிருந்து காப்பதற்கு இப்போதே தயாராகவேண்டும். இல்லையென்றால் குழப்பமான எதிர்கால சமூகம் உருவாக நாம் காரணமாக இருந்து விடுவோம்.


No comments:

Post a Comment