சிறீவைகுண்டம், ஏப். 4 -ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் முதல் முறையாக சங்க கால நாணயங்கள் கண் டுபிடிக்கப்பட்டுள்ளன.
பண்டைய தமிழர்களின் நாகரிகத் தொட்டி லாக விளங்கும் தூத்துக் குடி மாவட்டம் சிறீவை குண்டம் அருகே ஆதிச்ச நல்லூரில் ஒன்றிய அர சின் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வுப் பணி கள் நடைபெற்று வருகி றது. இங்கு 9 இடங்களில் குழிகள் தோண்டி அக ழாய்வு செய்ததில், 60-க்கும் மேற்பட்ட முது மக்கள் தாழிகள் கண்டெ டுக்கப்பட்டன.
மேலும் மண்பாண்ட பொருட்கள், இரும்பா லான பொருட்கள் உள் ளிட்ட ஏராளமான பழங் கால பொருட்கள் கண் டறியப்பட்டது.
இதுதவிர ஆதிச்சநல் லூரில் ஒன்றிய அரசு சார் பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. அகழாய்வு நடைபெறும் இடத்திலேயே கண் ணாடி இழை பதித்து, பழங்கால பொருட்களை காணும் வகையில் சைட் மியூசியமும் அமைக்கப் பட உள்ளது. இந்த நிலையில் ஆதிச்சநல்லூ ரில் அகழாய்வுப் பணிகளை ஒன்றிய தொல்லியல் துறை மண்டல இயக்குநர் அருண்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அக ழாய்வில் முதல் முறையாக சங்க கால பாண்டிய மன் னர்களின் 2 நாணயங்கள் கண்டறியப்பட்டு உள் ளன. இதில் ஒரு நாண யத்தில் தொட்டியில் கடல் ஆமைகள், மரம், யானை, மீன்கள் போன்றவற்றின் உருவம் பொறிக்கப்பட்டு உள்ளது தெளிவாக தெரி கிறது.
இதன்மூலம் இப்பகுதி யில் கடல்சார் வாணிபம் தலைசிறந்து விளங்கியது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment