கொழும்பு, ஏப். 2- இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை திடீ ரென்று ஏற்பட்டு விட வில்லை. 2019ஆம் ஆண் டில் இருந்தே ஆட்சியா ளர்களின் தவறான கொள்கை முடிவுகளால் இலங்கை பொருளாதா ரம் சரிவை நோக்கி செல் லத் தொடங்கியது.
கடந்த இரண்டு ஆண்டு கரோனா பொது முடக்கம், பொருளாதார வீழ்ச்சியை மேலும் அதி கப்படுத்தி விட்டது. 2019ஆம் ஆண்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே எடுத்த சில முக்கிய முடி வுகளே தற்போதைய நிலைக்கு காரணம்.
நாட்டின் வரி விதிப்பு முறையில் கோத்தபய ராஜ பக்சே மாற்றம் செய்தார். 15 சதவீத வரியை 8 சதவீத மாக குறைத்தார். இத னால் அரசின் வரி வரு வாய் குறைய தொடங்கி யது. அரசு துறையில் ஒரு லட்சம் புதிய வேலை களை உருவாக்கினார். இதனால் அரசின் செலவினம் அதிகரித்தது.
போதிய ஆய்வு செய் யாமல் இயற்கை விவசா யத்தை அரசு நடமுறைப் படுத்தியது. இதனால் தேயிலை, மிளகு, காய்கறி உற்பத்தியில் 30 சதவீதம் சரிவு ஏற்பட்டது.
அதேவேளையில் இலங்கையில் அதிகள வில் வருவாய் அளிக்கும் சுற்றுலாத் துறையும் கரோனா பெரும் தொற்று காரணமாக வீழ்ச்சி அடைந்தது. விவசாய விளை பொருள், ஆயத்த ஆடை ஏற்றுமதியும் சரிவை சந்தித்தது. நாட்டின் நிதிப்பற்றாக்குறை 2020ஆம் ஆண்டில் 5 சத வீதமாக இருந்தது. அது 15 சதவீதமாக அதிகரித்தது.
மேலும் அம்பன் தோட்டா துறைமுகம், பன்னாட்டு விமான நிலை யம் போன்ற பிரமாண்ட மான திட்டங்களில் அள வுக்கு மீறி இலங்கை அரசு முதலீடு செய்தது. இந்த முதலீடுகளுக்கு சீனாவின் கடன் உதவியை இலங்கை சார்ந்திருந்தது.
சீனாவுக்கு திருப்பி செலுத்த வேண்டிய கடனை கொடுக்க முடி யாததால் பல அரசு சொத்துக்கள் சீனாவிடம் குத்தகைக்கு சென்றது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை கருத்தில் கொள்ளாமல் இலங்கை அரசு அதிக அளவில் ரூபாய் நோட்டு களை அச்சிட்டது.
2 ஆண்டுகளில் மட் டும் 3 லட்சம் கோடி இலங்கை ரூபாய் அச்சி டப்பட்டது. செயற்கை யாக கரன்சியை பெருக் கியதன் விளைவாக பண வீக்கம் அதிகரித்தது. இத னால் உச்சக்கட்ட விலை வாசி உயர்வுக்கு வழி வகுத்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment