ஆதார்-பான் இணைக்காதவருக்கு அபராதம் வருமான வரித்துறை அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 1, 2022

ஆதார்-பான் இணைக்காதவருக்கு அபராதம் வருமான வரித்துறை அறிவிப்பு

 புதுடில்லி, ஏப்.1- வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கு பயன்படுத்தப்படும் நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும். இதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மார்ச் 31ஆம் தேதி ஆகும். இவ்விதம் இணைக்காத வர்களுக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இவ்விதம் இணைக்காத நிரந்தர கணக்கு எண் (பான்) ஓராண்டுக்கு செல்லுபடியாகும். இதன் மூலம் மார்ச் 2023 வரை வருமான வரி ரிட்டர்னை தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார்-பான் இணைப்பு கட்டாயம் என ஜூலை 1, 2017இல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி) கடந்த 5 ஆண்டுகளாக கால அவகாசத்தை அடுத்தடுத்து நீட்டித்து வந்தது. தற்போது மார்ச் 31, 2022-க்குப் பிறகு அவகாசம் நீட்டிக்கப்படவில்லை.

2023 மார்ச் 31-க்குள் பான்-ஆதார் இணைக்கப்படாத கணக்கு களின் செயல்பாடுகள் முடக்கப்படும் என சிபிடிடி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பான்-ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அறி வதற்கு பின்வரும் இணையதள முகவரிக்குச் சென்று சோதித்து அறிந்து கொள்ள முடியும். https://www.pan.utiitsl.com/panaadhaarlink/forms/pan.html/panaadhaar

மேலேக் குறிப்பிட்ட இணையதளத்திற்கு சென்று உங்களது பான் எண் மற்றும் உங்களது பிறந்த தேதியை பதிவிட வேண்டும். பிறகு திரையில் தோன்றும் எழுத்துகளை பதிவிட்டால், உங்களது கார்டின் நிலவரம் தெரியவரும். ஒருவேளை பான் ஆதார் இணைக்கப் படாவிடில் https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar

என்ற இணையதளத்திற்கு சென்று இணைக்கலாம்.

இந்த இணையதளத்திற்கு சென்று பான் எண், ஆதார் எண், அலைபேசி எண் ஆகியவற்றை பதிவிட வேண்டும். ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்தில் இணைப்பு செய்தால் ரூ. 500 அபராதம் செலுத்த வேண்டும். அதற்குப் பிறகு இணைப்பு செய்பவருக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என்று சிபிடிடி அறிக்கை தெரிவித்துள்ளது. ஜனவரி 24ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 43.34 கோடி நபர்களின் பான்-ஆதார் இணைக்கப் பட்டுள்ளது. ஆனால் ஆதார் கார்டு பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 131 கோடி. பான்-ஆதார் இணைப்பு மூலம் வரி ஏய்ப்பை தடுக்க முடியும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளி வாகனங்களுக்கு கட்டுப்பாடு

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை, ஏப்.1  புதுப்பிக்காத பள்ளி பேருந்துகளை இயக்கக் கூடாது என்பன உள்ளிட்ட றி வு று த் ல் ளு ன் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சென்னை வளசரவாக் கம் ஆழ்வார் திருநகரில்   பள்ளி வேன் மோதி விபத்து ஏற்பட்டதில் 2ஆம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரி ழந்தார். இச்சம்பவத்தில் வேன் ஓட்டுநர், பேருந்திலிருந்து மாண வர்களை இறக்கி விடும் பெண் ஊழியர் ஞானசக்தியையும் வளசரவாக்கம் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தனியார் பள்ளிகளின் மீது சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளன. அந்த சுற்றறிக்கையில், மாணவர்களை அழைத்து வரும் வாகனங்களில் உதவி யாளர் கட்டாயம் இருக்க வேண்டும். பள்ளி வாகனத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வந்ததும், அனைவரும் இறங்கி விட் டார்களா? என்று உறுதி செய்த பிறகே வாகனத்தை அந்த இடத்தை விட்டு நகர்த்த வேண்டும். பள்ளி வாகனங் களில் மாண வர்களை அதிக அளவில் ஏற்றக்கூடாது. பள்ளி வாகனங்களை ஆண்டு தோறும் முறையாக பராமரித்து உரிய சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.' என கூறப்பட் டுள்ளது. மேலும், புதுப் பிக்காத பள்ளி பேருந்துகளை இயக்க கூடாது , பள்ளி வாகனங் களில் சினிமா பாடல் போடக்கூடாது உள்ளிட்ட முக்கிய அறி வுரைகள் அந்த சுற்றறிக்கையில் இடம் பெற்றுள்ளன. சுற்றறிக் கையில் கூறப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பள்ளிகள் கண்டிப் புடன் பின்பற்ற வேண்டும் எனவும், இல்லையேல் கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படு மென கூறப்பட்டுள்ளது. மேலும் அறிவு றுத்தல்கள் முறையாக கடைப்பிடிக்கப்படு கிறதா? என்பதை தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment