சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு முதலமைச்சர்தான் வேந்தர் பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 30, 2022

சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு முதலமைச்சர்தான் வேந்தர் பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றம்!

சென்னை,ஏப்.30- முதலமைச்சரை வேந்தராக கொண்டு தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப் பட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத் தால்  28.4.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்ட சட்ட மசோதா பேரவையில் நிறைவேறியது.  

சென்னைக்கு அருகே சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதா  சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப் பட்ட நிலையில்,  குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், சித்த மருத்துவ பல்கலைக்கழக வேந்தராக முதல மைச்சர் மு.க.ஸ்டாலினும், இணை வேந்தராக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் இருப்பார்கள் என அறி விக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் இருந்து வரும் நிலையில், சித்த மருத்துவ பல்கலைக் கழக மசோதாவில் மாற்றம் செய்யபட்டுள்ளது. சித்த மருத்துவ பல்கலைக்கழகம் சென்னைக்கு அருகே அமைக்கப்பட உள்ளது. இதற்கான துணை வேந்தர், மற்ற பதிவாளர் உள் ளிட்ட பணியிடங்கள் வரும் காலங்களில் ஏற்படுத்தப்படும் என்றும் அந்த சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவை செயலகம் மூலமாக, சட்டத்துறை இந்த மசோதாக்களான கோப்புகளை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் ஆளுநர் மாளிகையில் இருந்து குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று. இந்த சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 15க்கும் மேற்பட்ட சட்ட மசோதா ஆளுநர் மாளிகையில் நிலுவையில் இருக்கும்போது, 28.4.2022 அன்று சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா ஆகிய இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment