இரண்டு ஆண்டுகளாக நாள்தோறும் வாட்ஸ்அப்பில் நான் அனுப்பும் விடுதலை நாளிதழின் நூற்றுக்கு மேற்பட்ட வாசகர்களில் - உடன் பணியாற்றி ஓய்வுபெற்று கோவையில் வசிக்கும் நண்பர் எஸ்.கே.யும் ஒருவர். விடுதலையைப் பார்த்ததுமே தவறாது நாளும் நன்றி அனுப்பி விடுவார். அண்மையில், கைபேசியில் அழைத்தவர் 'ப்ரீயா இருக்கீங்களா, பேசலாமா' என்றார். பேசி நீண்டநாட்களாயிற்றே என்ற ஆவலில் 'பேசுங்க' என்றேன்.
எடுத்த எடுப்பில் வேறு ஏதும் பேசாமல் ' உங்கள் ஆசிரியருக்கு உண்மையிலேயே வயது 89ஆகிறதா?' என்றார். நான் சிரித்தபடி ' என்ன சந்தேகம்?' என்றேன். ' இல்லை. கடந்த 21 நாட்களாக அவரது பயணம், பேச்சுக்களைப் பார்க்கின்றேன். நிச்சயம் எவராலும் நம்ப முடியாது - ஒன்று சொல்லட்டுமா?' என்று தொடர்ந்தவர்,' அவர் பேச்சுக்கள் பலவற்றை முகநூல், யூடியூப்பில் கேட்டிருக்கிறேன். "பூராவுமே" என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவார். இன்றைய திராவிட மாடல் ஆட்சி நடத்தும் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சி பல்லாண்டுகள் தொடர "பூராவுமே" மூத்த தலைவராக வாழும் ஆசிரியரின் அயராத உழைப்பும் வழிகாட்டலும்தான் என்பது என் கருத்து' என்றார். 'நன்றி எஸ்கே' என்றதோடு எங்கள் உரையாடல் முடிந்தது.
ஆம். அவர் எண்ணம், செயல் 'பூராவுமே' தமிழர்தம் வாழ்வுதான். அதுதான் நண்பர் போன்ற அப்படி எண்ணற்றவர்களை எண்ண வைத்துள்ளது.
ஞான. வள்ளுவன், வைத்தீசுவரன்கோயில்
No comments:
Post a Comment