இஸ்லாமாபாத், ஏப். 6- பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெயீத் யூசுப் பதவி விலகினார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தான், மேனாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் அரசு மீது, நவாஸ் ஷெரீபின் முஸ்லிம் லீக், பாக்., மக்கள் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பார்லி.,யில் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிராகரிப்பதாக அறிவித்த துணை அவைத் தலைவர் காசிம் சுரி, நாடாளுமன்றத்தை வரும் 25க்கு ஒத்திவைத்தார்.
3 மாதத்தில் தேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டது. பாகிஸ் தான் இடைக்கால பிரதமராக உச்சநீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி குல்சார் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோ சகர் மொயீத் யூசுப் தனது பதவியிலிருந்து விலகினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நாட்டிற்கு எனது பங்களிப்பிற்கு அனுமதி அளித்த பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment