சி.பி.அய்.எம். என்ற இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக தோழர்
கே. பாலகிருஷ்ணன் அவர்கள் மீண்டும் இரண் டாவது முறையாக தேர்ந் தெடுக்கப்பட்டார் என்ற செய்தி கேட்டு மகிழ்கிறோம்.
கடும் உழைப்பாளியாகிய, தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்களது அயராத தொண்டறத்திற்குக் கிடைத்த அங்கீகாரம் இது என்று கொள்ள வேண்டும்.
மதவெறி, ஜாதிவெறி தீவிரமாக பரவிடும் இந்தக் கால கட்டத்தில் அவற்றை எதிர்க்க இவரது தலைமை பெரிதும் பயன்படும் என்று நம்பி நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
2.4.2022
No comments:
Post a Comment