முகநூல் நிறுவனம் அரசியல் விளம்பரங் களை பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வெளியிட்டு வந்தது. மேலும் குடிமக்களின் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் சமூக வலைத்தளங்களில் தனிநபர் விபரங்களைத் தவறாகப் பயன் படுத்துவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இது குறித்து தகவல் தொழில் நுட்பத் துறைக் கான நாடளுமன்ற நிலைக் குழு முகநூல் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டது.
முகநூல் நிர்வாகக் குழுவினர் , ”நாங்கள் விளம்பரங்களை வெளியிடுவதில் சிறப் பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத் தில் மட்டும் கொள்கை வகுக்கப்பட்டு செயல்படுத்தினோம். இதில் எங்கள் தலை யீடு எதுவும் இல்லை. நாங்கள் விளம்பரம் வெளியிடுவதில் அரசியல், அரசியல் அல் லாத விபரங்கள் என்று வித்தியாசம் எதுவும் பார்ப்பதில்லை”எனத் தெரிவித்துள்ளனர்.
நிலைக் குழுவினர் முகநூல் பிரதிநிதிகளிடம் அல்ஜசீரா, தி ரிப்போட்டர்ஸ் கலெக்டிவ் நாளிதழில்களில் வெளியான செய்திகளைச் சுட்டிக்காட்டி எழுத்து பூர்வ விளக்கமளிக் கும்படிகேட்டுக்கொண்டனர். தவிர தனி நபர் உரிமைகளை தவறாகப் பயன்படுத்தி யது குறித்து சோபிஜாங் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் எழுப்பி உள்ள குற்றச் சாட்டு களுக்கும், தனிநபர் உரிமைகளை தவறாகப் பயன்படுத்தியதை எழுத்துபூர்வ விளக்க மளிக்க நிலைக் குழு வலிறுத்திவருகிறது. விரைவில் நிலைக் குழு விசாரணை அறிக் கையை தாக்கல் செய்யவுள்ளது.
அதாவது முகநூல் நிறுவனம் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் பாஜகவின் சமூக வளைதளபிரிவு போலவே செயல்பட்டது. அமெரிக்கா, பிரிட்டன் உள் ளிட்ட நாடுகளின் தேர்தலின் போது நடுநிலை நாடகமாடிய முகநூல் நிறுவனம் இந்தியாவில் முழுக்க முழுக்க பாஜக சார்பு நிறுவனமாக இருந்து கொண்டு புதிதாக கொள்கை வகுத்துச் செயல்படுகிறோம் என்று சப்பைக்காரணம் கூறியுள்ளது.
முகநூலின் பாஜக சார்பு தொடர்பாக சோனியா காந்தி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்த நிலையில் நிலைக் குழு முன்பு தன்னிலை விளக்கம் அளித்தி ருந்ததும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment