தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் - நாளை தொடங்குகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 5, 2022

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் - நாளை தொடங்குகிறது

சென்னை, ஏப்.5- தமிழ்நாடு அரசுத்துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதிப்பதற்காக சட்டசபை கூட்டத்தொடர் நாளை (6.4.2022) தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் மே 10ஆம் தேதி வரை 22 நாட்கள் நடைபெறவுள்ளது. 

தமிழ்நாடு சட்டசபையில் கடந்த மார்ச் 18-ஆம் தேதி பொது நிதிநிலை அறிக்கையும் (பொது பட்ஜெட்), 19-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. அதன் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதித்து, அதற்கு 2 துறைகளின் அமைச்சர்களும் பதில் அளித்தனர். அந்த பட்ஜெட் கூட்டத் தொடர் 24ஆம் தேதி நிறைவடைந்தது.

இந்தநிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் கடந்த வாரம் பேரவைத் தலைவர் அப்பாவு தலை மையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் துரை முருகன், கே.என்.நேரு, அய்.பெரியசாமி, பொன் முடி, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசன் மவுலானா, பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நேரலை ஒளிபரப்பு

அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை பேரவைத் தலைவர் அப்பாவு வெளியிட்டார். இதுதொடர் பாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக அரசு துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதிக்க, சட்டசபை கூட்டத்தொடர் ஏப்ரல் 6-ந்தேதி (நாளை) தொடங்கி மே 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்தார். எந்தெந்த தேதியில் எந்தெந்த அரசுத்துறைகளின் மானியக்கோரிக்கை விவாதிக்கப்படும்? என்ற விவரங் களையும் சபாநாயகர் அப்பாவு வெளியிட்டார்.

அதன்படி நாளை (6.4.2022) சட்ட சபை கூட்டத் தொடர் தொடங்குகிறது. சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டசபை மண்டபத்தில் இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. கேள்வி நேரம் மற்றும் அவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் வெளியிடும் அறிவிப்புகள் நேரலை ஒளிபரப்பு செய்யப்படும்.

மு.க.ஸ்டாலின் ஆய்வு

இதற்கிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் நீர்வளத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

கடந்த நிதியாண்டில் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித் தும், விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித் தும் ஆய்வு மேற்கொண்டார்.

புதிய அறிவிப்புகள்

மேலும், இந்த நிதியாண்டின் மானிய  கோரிக்கையில் துறை வாரியாக அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்தும் ஆலோசனை மேற் கொண் டார்.


No comments:

Post a Comment