ஏட்டு திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 29, 2022

ஏட்டு திக்குகளிலிருந்து

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படக்கூடிய ஒன்றிய தலவரி மற்றும் தலமேல்வரியும், மாநில அரசுக ளோடு பகிர்ந்தளிக்கப்படத் தேவையில்லை என்பதால், இந்த வரிகளை மிகக் கடுமையாக உயர்த்தி, மக்கள் மீது சுமையைத் திணித்து, அதனால் கிடைக்கும் லட்சக் கணக்கான கோடி வருவாயை முழுவதும் தனதாக்கிக் கொண்டது ஒன்றிய அரசு என தமிழ்நாடு முதலமைச்சர் சட்டசபையில் பேச்சு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி  வன்முறை யையும் வெறுப்பையும் தூண்டுகிறது. இதற்குப் பின்னால் ஒரு பெரிய சதி உள்ளது என்று சிபிஎம் பொதுச் செயலா ளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.

அதிக மதிப்பெண்கள் பெறும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பொதுப் பிரிவு இடங்களுக்கு தகுதியுடைய வர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment