மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு திருவாரூரில் ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம் - வைகோ அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 1, 2022

மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு திருவாரூரில் ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம் - வைகோ அறிவிப்பு

சென்னை, ஏப்.1  .தி.மு. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:-

இந்தியா முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில், இந்தக் கல்வி ஆண்டு முதல் இள நிலைப் படிப்புகளில் சேர்வதற்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப் படும் என பல்கலைக்கழக மானியக் குழு கடந்த மார்ச் 20 ஆம் தேதி அறிவித்து உள்ளது.

இந்தத் தேர்வுக்கான விண் ணப்பத்தளம் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து செயல்பாட்டுக்கு வருகின்றது. இந்த ஆண்டுக்கான பொது நுழைவுத் தேர்வு ஜூலை மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கணினி வழியில் மூன்றரை மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வில், அனைத்து வினாக்களும் 12ஆம் வகுப்பு சி.பி.எஸ்.. பாடத்திட்டத் தில் இருந்து மட்டுமே கேட்கப்படும். எனவே, மாணவர்கள் என்.சி.. ஆர்.டி. பாட நூல்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று யூ.ஜி.சி தெரிவித்து உள்ளது. அத் துடன், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பெறும் மதிப்பெண்களுக்கு இந்த நுழைவுத் தேர்வில் எந்த மதிப்பும் தரப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்று பொதுத்தேர்வில் மாண வர்கள் பெறும் மதிப் பெண்களை மதிப்பற்றதாக ஆக்கி, மாநில அரசின் கல்வி முறையை மதிப்பில் லாமல் ஆக்கும் இந்த நுழைவுத் தேர்வின் மூலம், மீண்டும் புதியக் கல்விக் கொள்கையை திணிக்கும் முயற்சியில் ஒன்றிய பா.. அரசு ஈடுபட்டு உள்ளது. மேலும், இந்தத் தேர்வை மற்றக் கல்லூரிகளும், தனியார் பல்கலைக்கழகங்களும் பயன் படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம், ஏழை எளிய மாண வர்களின் உயர்கல்வி வாய்ப்பு தடுக்கப்படும்.

சமூக நீதிக்கு எதிரான இந்தப் பொது நுழைவுத் தேர்வை தொடக் கத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும். ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பை கண்டித்து, மத்திய பல்கலைக்கழகங்களில் நடத்தப் படும் பொது நுழைவுத் தேர்வுக்கு எதிராக, மறுமலர்ச்சி தி.மு. இளைஞர் அணி மாணவர் அணி சார்பில், மத்தியப் பல்கலைக் கழகம் அமைந்திருக்கும் திருவாரூரில் வருகின்ற ஏப்ரல் 7ஆம் தேதி வியாழக்கிழமை அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் படும். திருவாரூர் மாவட்டப் பொறுப் பாளர் .பாலச்சந்திரன் தலை மையில், இளைஞர் அணிச் செய லாளர் .. ஆசைத்தம்பி, மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார் ஆகியோரது ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த ஆர்ப் பாட்டத்தில் கழக அரசியல் ஆய்வு மய்ய செயலாளர் மு.செந்திலதிபன் சிறப்புரை ஆற்றுவார். தஞ்சை மண்டல கழகத்தினர், அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் பெருந் திரளாக பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

No comments:

Post a Comment