சென்னை, ஏப்.1 வங்கியில் அம்பேத்கரின் படத்தை வைத்ததற்காக கிளை உதவியாளரை பணி நீக்கம் செய்யப்பட்ட ஆணை செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சென்னை இந்திய ஸ்டேட் வங்கியில் அம்பேத்கரின் படத்தை வைத்ததற்காக கிளை உதவியாளரை பணி நீக்கம் செய்யப்பட்ட ஆணை செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு அளித்துள்ளது.
ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், பொதுத்துறை வங்கிகளில் அம்பேத்கர் படத்தை வைக்கலாம் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும் வங்கியில் அம்பேத்கர் ஒளிப்படம் வைத்ததாக பணி நீக்கம் செய்யப்பட்டவருக்கு மீண்டும் பணிநியமனம் வழங்க வேண்டும் என்றும் இந்திய ஸ்டேட் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு உணவு பங்கீட்டு கடைகளுக்கு ரூ.302 கோடி மானியம்
தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, ஏப்.1 - தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நசிமுத்தீன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:
கூட்டுறவுத் துறை நடத்தும் நலிவுற்ற உணவு பங்கீட்டுக் கடைகளுக்கான 2019-2020ஆம் ஆண்டுக்கான மானியத் தொகையின் முன் பணம் ரூ.150 கோடியை அனுமதிக்க வேண்டும் என்று கூட் டுறவு சங்கங்களின் பதிவாளர் கடந்த 2020ஆம் ஆண்டில் அர சுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதைத்தொடர்ந்து அந்தத் தொகை விடுவிக்கப்பட்டது..
இந்தநிலையில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி மற்றும் இம்மாதம் 28ஆம் தேதிகளில் அரசுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம் எழுதினார். அதில், 2019-2020ஆம் ஆண்டுக்கான மொத்த மானியமாக ரூ.452.78 கோடியை கூட்டுறவு சங்கங்கள் கோரி யிருந்தன.
அதில் முன்பணமாக ரூ.150 கோடி தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.302.78 கோடி மானியத்தை வழங்க அரசு உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
அதைத்தொடரந்து, ரூ.302.78 கோடி தொகையை விடுவிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தன்னம்பிக்கையை அதிகரிக்கவும்
மன அழுத்தத்தை குறைக்கவும் உடற்பயிற்சி அவசியம்
சென்னை, ஏப்.1 தன்னம்பிக்கையை அதிகரிக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் நாள்தோறும் குறிப்பிட்ட நேரம் அனைவருக்கும் உடற்பயிற்சி அவசியம் என்று கல்ட் டாட் பிட் உடற் பயிற்சி கூட நிர்வாகி நரேஷ் கிருஷ்ணசாமி கூறினார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் புதிய மய்ய திறப்பு விழாவில் பேசிய அவர், வாடிக்கை யாளர்களுக்கு சிறந்த பயிற்சியாளர்களால் பல்வேறு விதமான உடற் பயிற்சிகள் கற்றுத்தரப்படும் என்றார்.
குத்துச்சண்டை, ஏரோபிக் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் பயிற்றுவிப்பாளர்கள் ஒவ்வொருக்கும் பல நுட்பங்களை கற்றுத்தருவர்.
இந்த பயிற்சிகள் ஒருவருக்கும் தற்காப்பு திறன்களை வளர்த்துக் கொள்ளவும் தன்னம்பிக்கை மற்றும் சமநிலையை மேம்படுத்த உதவும் என்றும் அவர் கூறினார். தடகள வீராங்கனை மற்றும் பயிற்சியாளர் அய்ஸ்வர்யா கிருஷ்ணன், உடற்தகுதி ஆர்வலர்களான அம்சத் கான், பெசன்ட் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னையில் சுற்றுலா கண்காட்சி
சென்னை, ஏப்.1 கோவா சுற்றுலா துறை இந்த ஆண்டு சென்னையில் நடைபெறும் டிடிஎப் சுற்றுலா கண்காட்சியில் டி100 என்னும் எண்ணில் தனது அரங்கை காட்சிப்படுத்தியுள்ளது.
டிடிஎப் சுற்றுலா கண்காட்சி சென்னையில் மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது, இது மார்ச் 31 முதல் ஏப்ரல் 2, 2022 வரை சென்னை வர்த்தக மய்யத்தில் நடத்தப்படுகிறது. மிகப்பெரிய வலைப்பின்னல் வாய்ப்புகளை வழங்குவதால் டிடிஎப் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான பயணவாசிகளை ஈர்க்கிறது.
கோவா சுற்றுலா துறை தனது புதிய சுற்றுலா முயற்சிகள், செயல்பாடுகள், நிகழ்வுகள் மற்றும் முன்னோக்குகள் அனைத்தையும் இந்த அரங்கில் காட்சிப்படுத்துகிறது
இது குறித்து கோவா சுற்றுலா துறையின் இணை இயக்குனர் தீரஜ் வாக்லா கூறுகையில், கோவிட் தொற்று நோய் காரணமாக நாடு முழுவதும் சுற்றுலா துறை பெரிதும் பாதிப்படைந்தன.
தற்போது தொற்று நோயின் தீவிரம் பெருமளவு குறைந்திருப்பதால் அனைத்து மாநிலங்களை போல் கோவாவில் சுற்றுலாவிற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோவா
சுற்றுலா துறை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி யுள்ளது.
மேலும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக உங்கள் கோவா சுற்றுலாவில் பல்வேறு புதிய அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. உங்களது கோவா சுற்று பயணம் நிச்சயம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவத்தை அளிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று கூறினார்.
No comments:
Post a Comment