ரஷ்யாவின் மேற்கு நகரமான பெல்கோரோட் நகரத் தில் உள்ள எண்ணெய் கிடங்கு மீதுதான் உக்ரைன் தாக்கு தல் நடத்தியிருக்கிறது. உக்ரைனின் இந்த தாக்குதலில் எண் ணெய் கிடங்கு கொளுந்து விட்டு எரிகிறது.
எண்ணெய் சேமிப்பு கிடங்கில் பணியாற்றிய ஊழியர் களில் இருவர் உக்ரைனின் தாக்குதலால் காயம் அடைந் துள்ளனர். 170-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
உக்ரைன் தாக்குதல் நடத்திய பெல்கோரோட் நகரம் உக்ரைன் - ரஷ்யா எல்லையில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. உக்ரைனின் கார்கிவ் நகரில் இருந்து 80 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.
No comments:
Post a Comment