புதுடில்லி, ஏப். 2- ‘மைக்ரோசாப்ட்’ நிறு வனம், இந்தியாவில் இருக்கும் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனர்களுக்கான மய்யம் ஒன்றை, துவங்கி உள்ளது.
இந்த தளமானது, ஸ்டார்ட் அப் நிறுவனர்களின் வணிக பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் கைகொடுப் பதாக இருக்கும். மேலும், தொழில்நுட்ப வசதிகளை பெற உதவும் தளமாகவும் இருக்கும் என, மைக்ரோசாப்ட் தெரிவித்து உள்ளது.
இது குறித்து மேலும் தெரிவித்து உள்ளதாவது:‘மைக்ரோசாப்ட் ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் மய்யம்’ ஒரு புதிய டிஜிட்டல் தளமாகும். இது, இந்தியாவில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனர்களுக்கான தளமாகும்.ஸ்டார்ட்அப்களுக்கு, அவற் றின் வணிகத்தை உருவாக்க மற்றும் நடத்த தேவையான தொழில்நுட்பம், கருவிகள் மற்றும் ஆதாரங்களுக்கான இலவச அணுகலை இந்த தளம் வழங்கு கிறது.
இதன் வாயிலாக, அவர்கள் 2.28 கோடி ரூபாய் மதிப்பிலான பயன்களை அடைய முடியும். மைக்ரோசாப்ட் நிறு வனம், ஸ்டார்ட் அப் நிறுவனர்களுடன் கலந்து பேசி, ஆராய்ச்சிகள் செய்து, இந்த வசதியை ஏற்படுத்தி உள்ளது.
துவக்க நிலையில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவைப்படும் அனைத்து வகையான ஆதரவையும் வழங்கி, அவை ‘யுனிகார்ன்’ நிறுவனமாக மாற உதவி செய்வதாக இந்த மய்யம் இருக்கும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment