டில்லித் தலைநகரில் பெரியார் மய்யம் - அண்ணா - கலைஞர் அறிவாலயம்: திராவிடக் கோட்டை என்றும் கொள்கைக் கோட்டையாகும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 1, 2022

டில்லித் தலைநகரில் பெரியார் மய்யம் - அண்ணா - கலைஞர் அறிவாலயம்: திராவிடக் கோட்டை என்றும் கொள்கைக் கோட்டையாகும்!

கழகத் தலைவர் ஆசிரியர் அறிக்கை!

இந்தியத் தலைநகர் டில்லியில் தி.மு.. இயக்கத்தின் அமைப்புகளுக்கான இடம் ஒதுக்கீடு அடிப்படையில் நிலத்தை உரிய முறையில் பெற்று, 'திராவிடக் கோட்டை' ஒன்றை, இந்திய ஆளுமையின் முதல் முதலமைச்சராக அங்கீகரிக்கப்பட்டுள்ள சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மானமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களது ஆட்சிக்கால அருஞ்சாதனையாக 'அண்ணா கலைஞர் அறிவாலயம்' என்று மூன்றடுக்கு மாளிகை உருவாகி, நாளை (2.4.2022) திறப்பு விழா நடைபெற விருப்பதை அறிந்து தாய்க்கழகமான திராவிடர் கழகம் பூரித்து வாழ்த்துவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்.

தந்தை பெரியார் பெயரில் டில்லியில் சிறிய இடத்தில் ஒருமுறையும், அது திட்டமிட்டே இடிக்கப்பட்ட பிறகு, நமது அறப்போராட்டத்தினால் இரண்டாம் முறை ஜெசோலா பகுதியில் ஒரு ஏக்கரில் இரண்டாம் பெரியார் மய்யம் அடுக்குகளைக் கொண்டு கம்பீரமாய் எழுந்து நின்றது!

முதல் மய்யத்தை 1998 இல் சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் திறந்து வைத்தார். இரண்டாவது வேறு ஒரு முக்கிய இடத்தில் விரிவாக்கப்பட்ட பெரியார் மய்யக் கட்டடத்தை முத்தமிழறிஞர் மானமிகு கலைஞர் முதல மைச்சராக இருந்தபோது 2.5.2010 இல் திறந்து வைத்தார்.

''திராவிடம் வெல்லும் அதை நாளைய வரலாறு சொல்லும்'' என்பதற்கு டில்லித் தலைநகரில் உள்ள பெரியார் மய்யம், அண்ணா - கலைஞர் அறிவாலயம் கம்பீரமான கருத்துக் காட்சியகங்களாகும்.

'நம்மில் ஒருவரான' முதலமைச்சர் அவர்களின் பெருமைமிகு இச்சாதனைக்காக அவரையும், அவருக்கு இப்பெரும் பணியில் துணை நிற்கும் தி.மு..வின் செயல் வீரர்களையும் பாராட்டி, வாழ்த்துகிறோம்.

திராவிடக் கோட்டை என்றும் கொள்கைக் கோட்டையாகப் பயனளிக்கும் என்பதில் அய்யமில்லை!

வெல்க திராவிடம்!

கி.வீரமணி

 தலைவர்,

 திராவிடர் கழகம்

சென்னை       

1.4.2022             

No comments:

Post a Comment