ஏப். 9,10ஆம் தேதிகளில் தி.மு.க. பொதுக் கூட்டங்கள் செங்கல்பட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 5, 2022

ஏப். 9,10ஆம் தேதிகளில் தி.மு.க. பொதுக் கூட்டங்கள் செங்கல்பட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

 சென்னை,ஏப்.5- தி.மு.. கொள்கை பரப்பு செயலாளர்கள் திருச்சி சிவா, திண்டுக்கல் அய்.லியோனி, சபாபதி மோகன் ஆகியோர் இணைந்து  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தி.மு..வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு..ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த மாதம் 18-ஆம் தேதி அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் தாக்கல் செய்த அரசு ஊழியர், ஆசிரியர், மாணவர், மகளிர், கழனியில் பாடுபடும் உழவர், ஆலை யில் உழைக்கும் தொழிலாளர், வேலை வாய்ப் பில்லாதோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் நலன் பேணும் நிதிநிலை அறிக்கையின் சிறப்பு களையும், மக்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் சீர்மிகு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்திடும் வகையிலும், நடைபெற்று முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் வரலாறு காணாத பெருவெற்றியை தி.மு..வுக்கு வழங்கிய வாக் காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், தமிழ்நாட்டில் உள்ள 77 கழக மாவட்டங்களில் வரும் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் பொதுக் கூட்டங்கள் நடைபெறும்.

அந்தந்த மாவட்ட செயலாளர் - பொறுப் பாளர்கள் தலைமையிலும், சட்டமன்ற, நாடாளு மன்ற உறுப்பினர்கள் முன்னிலையிலும் நடை பெறும் இப்பொதுக்கூட்டங்களை உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தி.மு.. நிர்வாகிகள் பங்கேற்று சிறப்புற நடத்திட வேண் டும். அதன்படி, வரும் 10-ஆம் தேதி செங் கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு..ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

9-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம்- அமைச்சர் துரைமுருகன், கும்பகோணம்- மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு, திருச்சி மாவட்டம் சிறீரங்கம்- கே.என்.நேரு, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர்- அமைச்சர் அய்.பெரியசாமி, சென்னை மாதவரம்- அமைச்சர் பொன்முடி, பொன்னேரி - ஆர்.எஸ்.பாரதி, சென்னை ராயபுரம்- மக்களவை உறுப்பினர் கனிமொழி  மயிலாப்பூர் - சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்,  மக்களவை உறுப்பினர் அப்துல்லா,  சோழிங்கநல்லூர்- மக் களவை உறுப்பினர் தயாநிதிமாறன் உள்ளிட் டோர் பேசுகிறார்கள்.

No comments:

Post a Comment