வெளிநாட்டு சிறைகளில் 8,278 இந்தியர்கள்; அமைச்சர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 2, 2022

வெளிநாட்டு சிறைகளில் 8,278 இந்தியர்கள்; அமைச்சர் தகவல்

புதுடில்லி, ஏப்.2- வெளிநாட்டு சிறைகளில் விசாரணைக் கைதி கள் உள்பட 8 ஆயிரத்து 278 இந்திய கைதிகள் உள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவை யில் அளிக்கப்பட்ட ஒரு எழுத்துப்பூர்வ கேள்விக்கு ஒன்றிய வெளியுறவு இணை அமைச்சர் வி.முரளீதரன் பதிலளித்தார். அப்போது அவர், வெளிநாட்டு சிறை களில் விசாரணைக் கைதிகள் உள்பட 8 ஆயிரத்து 278 இந்திய கைதிகள் உள்ளனர். அவர்களில் 156 பேர் ஆயுள் தண்டனை பெற்றவர்கள்.

பல நாடுகளில் அமலில் உள்ள வலுவான தனியுரிமை சட்டங்களின் காரணமாக, சிறைக்கைதிகள் விருப்பப்பட் டால் அன்றி, அவர்களைப் பற்றிய தகவல்களை அந் நாட்டு அதிகாரிகள் அளிப்ப தில்லை எனக் கூறினார்.

No comments:

Post a Comment