வாசிங்டன், ஏப். 5- அமெரிக்கா வில் கலிபோர்னியா மாகா ணத்தின் தலைநகர் சாக்ர மென்டோ. அதிகாலை நேரத்தில் அங்கு உணவ கங்கள் மற்றும் பார்கள் நிரம்பியுள்ள பகுதியில் தானியங்கி துப்பாக்கிச் சூடுகள் நடந்தன.
இதன்காரணமாக, தெருக்களில் மக்கள் அலறியவாறு ஓட்டம் பிடித்தனர். சம்பவ பகு திக்கு ஏராளமான ஆம் புலன்சுகள் விரைந்தன. இந்த கொடூர துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. இதன் பின் னணியோ, கூடுதல் தகவல் களோ வெளிவரவில்லை.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இந்த நகரின் 9ஆவது மற்றும் 13ஆவது வீதிகளுக்கு இடையே யான பகுதிகளை காவல் துறையினர் சுற்றிவளைத்து மூடினர். இந்தப் பகுதியை பொதுமக்கள் தவிர்க்கு மாறு கேட்டுக் கொள்ளப் பட்டனர். அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
No comments:
Post a Comment