ஏப்.6ஆம் தேதி முதல் சட்டப் பேரவை கூட்டத் தொடர் சட்ட பேரவைத் தலைவர் மு. அப்பாவு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 1, 2022

ஏப்.6ஆம் தேதி முதல் சட்டப் பேரவை கூட்டத் தொடர் சட்ட பேரவைத் தலைவர் மு. அப்பாவு அறிவிப்பு

சென்னை, ஏப்.1 மானிய கோரிக்கை மீதான விவாதங்க ளுக்காக தமிழ்நாடு சட்டசபை வருகிற (ஏப்ரல்) 6ஆம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் மே 10ஆம் தேதி வரை 22 நாட்கள் நடைபெறும் என்று சட்ட பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் கடந்த 18ஆம் தேதி பொது நிதிநிலை அறிக்கையும் (பட்ஜெட்), 19ஆம் தேதி வேளாண் பட் ஜெட்டும் தாக்கல் செய்யப்பட் டன. அந்த நிதி நிலை கூட்டத் தொடர் கடந்த 24ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த நிலையில் சென்னை தலைமைச் செயல கத்தில்  சட்ட பேரவைத் தலைவர் அப்பாவு தலை மையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடை பெற்றது.

கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, அய்.பெரியசாமி, பொன்முடி, .தி.மு.. சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசன் மவுலானா, பா... உறுப்பினர் ஜி.கே.மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து தமிழ் நாடு அரசு துறைகளின் மானிய கோரிக்கைக்காக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் தேதிகளை சட்ட பேரவைத் தலைவர் மு.அப்பாவு வெளியிட் டார். அதன் விவரம் வருமாறு:-

நெடுஞ்சாலைத்துறை

ஏப்ரல் 6ஆம் தேதி - நீர்வளத் துறை; 7ஆம் தேதி - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை;

8ஆம் தேதி - கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு; (9 மற்றும் 10ஆம் தேதி சனி, ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை) ; 11ஆம் தேதி - உயர் கல்வித்துறை, பள்ளி கல்வித்துறை;

12ஆம் தேதி - நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித் துறை (கட்டடங்கள்) ; 13ஆம் தேதி - வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன் வளம் மற்றும் மீனவர் நலன், பால்வளம்;

(14ஆம் தேதி தமிழ்ப்புத் தாண்டு, 15ஆம் தேதி புனித வெள்ளி, 16 மற்றும் 17ஆம் தேதி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை நாள்கள்) ;

18ஆம் தேதி - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு; 19ஆம்தேதி - நீதி நிர்வா கம், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள், சட்டத்துறை, செய்தி மற்றும் விளம்பரம், எழுது பொருள் மற்றும் அச்சு;

எரிசக்தித்துறை

20ஆம் தேதி - வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை; 21ஆம் தேதி - மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை;

22ஆம் தேதி - பிற்படுத்தப்பட் டோர், மிகப்பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை; (23 மற்றும் 24ஆம் தேதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை);

25ஆம் தேதி - வனம், சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத்துறை; 26ஆம் தேதி - எரிசக்தித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை;

27ஆம் தேதி - தொழில் துறை, தமிழ் வளர்ச்சி; 28ஆம் தேதி - கைத்தறி மற்றும் துணிநூல், கதர், கிராமத்தொழில்கள் மற்றும் கைவினைப்பொருட்கள்; வணிக வரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு;

காவல் துறை

29ஆம் தேதி - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை; (ஏப்ரல் 30, மே 1ஆம் தேதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை; மே 2ஆம் தேதி சட்டப் பேரவை கூட்டம் கிடை யாது; மே 3ஆம் தேதி - ரம்ஜான்);

4ஆம் தேதி - இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள், நிர்வாகம், போக்குவரத்து துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை; 5ஆம் தேதி - இந்து சமய அற நிலையத்துறை, சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு;

6ஆம் தேதி - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை; 7ஆம் தேதி காவல், தீய ணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் (8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை) ; 9ஆம் தேதி - காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, நிதித்துறை, மனிதவள மேலாண்மைத்துறை, ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும்;

10ஆம் தேதி - பொதுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, அரசினர் சட்ட மசோதாக்களை ஆய்வு செய்து நிறைவேற்றுவது. அனைத்து நாட்களிலும் காலை 10 மணிக்கு சட்டசபை கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment