புதுடில்லி, ஏப்.7 மாநிலங்களவை யில் தமிழ்நாடு எம்.பி.க்கள் 6 பேரின் பதவிக்காலம் ஜூன் மாதம் முடி கிறது. இதன்படி ஒன்றிய அமைச் சர் நிர்மலா சீதாராமனுக் கும் நிறைவடைகிறது.
நாடாளுமன்ற மாநிலங்களவை யில் நியமன உறுப்பினர்கள் 12 பேரை சேர்த்து 245 உறுப்பினர் இடங்கள் உள்ளன.
மாநிலங் களவை உறுப்பினர் களின் பதவிக் காலம் 6 ஆண்டுகள் ஆகும்.
இங்கு உறுப்பினர்களாக உள்ளவர்களில் 3இல் 2 பங்கு பேரின் 6 ஆண்டு பதவிக்காலம் ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை முடி வடையும்.
இதன்படி வருகிற ஜூன் மாதம் 20 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது.
இதில் தமிழ்நாட்டில் இருந்து 6 பேரின் பதவிக்காலம் நிறை வடைகிறது.
அதாவது தி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர். எஸ். பாரதி, டி.கே.எஸ்.இளங் கோவன், கே.ஆர்.என்.ராஜேஷ் குமார் மற் றும் அ.தி.மு.க. சார்பில் தேர்ந் தெடுக்கப்பட்ட எஸ்.ஆர்.பாலசுப் பிரமணியன், வழக்கு ரைஞர் நவநீத கிருஷ்ணன், ஏ.விஜய குமார் ஆகிய 6 பேருக்கும் வருகிற 29.6.2022 அன்று பதவிக்காலம் முடி
கிறது.
இதைப்போல கருநாடகத்தில் பதவிக்காலம் நிறை வடையும் மாநிலங் களவை உறுப்பினர் களில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மேனாள் ஒன்றிய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் குறிப்பிடத்தக்க வர்கள்.
No comments:
Post a Comment