தமிழ்நாடு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு
சென்னை, ஏப்.27. தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதியதாக ஆட்டோ ரிக்சா வாங்கும் பொருட்டு தலா 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட அம்சங் களுடன் தமிழ்நாடு சட்டப் பேரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (26.4.2022) நடந்த தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மீதான விவாதத்தின் போது, புதியதாக 11 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்குதல், அமைப்புசாரா தொழிலாளர்கள் சேவை செயலி" உருவாக்குதல், பட்டாசு மற்று தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு நிபுணர் களைக் கொண்டு விழிப்புணர்வு முகாம்கள் நடத்துதல் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங் களையும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் அறிவித்தார். அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:
இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்கும் பொருட்டு புதியதாக 11 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு பாடப்புத்த கங்கள் தமிழ் மொழியில் வழங்கப்படும்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உபயோகமற்ற மற்றும் சீர் செய்ய இயலாத நிலையில் உள்ள இயந்திரங்கள், கருவிகள் மற்றும் தளவாடங்கள் மாற்றப்பட்டு புதியதாக நிறுவப்படும்.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதி உயர்த்தி வழங்கப்படும்.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யங்களில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டங்களுக்கு ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்படும் 2 கோடி ரூபாய் நிதி 4.88 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டு நர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாக னங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதியதாக ஆட்டோ ரிக்சா வாங்கும் பொருட்டு தலா 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
சட்டமுறை எடையளவுச் சட்டத்தின் கீழ் எடைகள் மற்றும் அளவைகளை மின்னணு முத்திரையிடுதல் பணியை மேற்கொள்ள சட்டமுறை எடையளவுப் பிரிவு கணினிமயமாக்கப்படும்.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலா ளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் விபத்து மரணம் அடைந்தால் அவர்களின் குடும் பத்தினருக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் விபத்து மரண உதவித் தொகை 1 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டு மானத் தொழிலாளர்களுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் மகப்பேறு நலத்திட்ட உதவித் தொகை 6,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தற்பொழுது வழங்கப் பட்டு வரும் கல்வி நலத்திட்ட உதவித் தொகையான அய்டிஅய் அல்லது பாலி டெக்னிக் படிப்பினை வீட்டிலிருந்து சென்று படிப்பதற்கு 1,000 ரூபாய் மற்றும் விடுதியில் தங்கி படிப்பதற்கு 1,200 ரூபாய் ஆகியவை ஆண்டிற்கு 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் திருமண நலத்திட்ட உதவித் தொகை 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு பெற்ற அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு "அமைப்புசாரா தொழிலாளர்கள் சேவை செயலி" உரு வாக்கப்படும்.
அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர் களுக்கு மற்றும் பொருத்திய திறன் அட்டை வழங்கப்படும்.
தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டு நர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலா ளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் தொழி லாளர்களுக்கு தற்பொழுது வழங்கப்படும் மகப்பேறு நலத்திட்ட உதவித்தொகை 6,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்களின் குழந் தைகளுக்கு, தற்பொழுது வழங்கப்பட்டு வரும் கல்வி நலத்திட்ட உதவித் தொகை, அய்டிஅய் அல்லது பாலிடெக்னிக் படிப் பினை வீட்டிலிருந்து சென்று படிப்பதற்கு 1,000 ரூபாய் மற்றும் விடுதியில் தங்கி படிப்பதற்கு 1,200 ரூபாய் ஆகியவை ஆண் டிற்கு 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment