லண்டன், ஏப். 4- இங்கிலாந்தில் தற்போது 16 வயதுக்கு மேற் பட்ட அனைவருக்கும் பூஸ்டர், அதாவது 3ஆவது டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப் பட்டு வருகிறது. இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக கரோனாவால் மிகவும் பாதிக்கப்படுபவர்களுக்கு ‘ஸ்பிரிங் பூஸ்டர்’ அதவாது 4ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று இங்கிலாந் தின் தடுப்பூசி மற்றும் நோய்த் தடுப்புக்கான கூட்டுக் குழு அண்மையில் அறிவுறுத்தியது.
இந்த சூழலில் தற்போது இங்கிலாந்தில் சுமார் அய்ந்து மில்லியன் குழந்தைகள் தடுப் பூசி பெறத் தகுதி உடையவர் களாக உள்ளனர். இவர்களுக்கு 12 வார இடைவெளியில் குறைந்த டோஸ் தடுப்பூசியின் இரண்டு தவணைகளை வழங் கலாம் என பரிந்துரை செய் யப்பட்டுள்ளது. ஏற்கெனவே பல நாடுகள் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத் தத் தொடங்கிவிட்டன.
இந்நிலையில் இங்கிலாந் தில் நாளை முதல் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைக ளுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. இதன்படி 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பராமரிப் பாளர்கள் தங்களின் குழந்தைக ளுக்கு குறைந்த டோஸ் கரோனா தடுப்பூசியை முன்பதிவு செய் யலாம் என அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment